This Article is From Mar 27, 2020

தனிமைப்படுத்தலை மறுத்து உ.பி சென்ற கேரள ஐ.பி.எஸ் அதிகாரி

மிஸ்ரா தனது பணியை தொடர மார்ச் 19 அன்று கொல்லத்திற்குத் திரும்பினார், ஆனால் அவர் விடுப்புக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இருப்பினும், வியாழக்கிழமை, அவர் கொல்லத்தில் இல்லை

தனிமைப்படுத்தலை மறுத்து உ.பி சென்ற கேரள ஐ.பி.எஸ் அதிகாரி

அனுபம் மிஸ்ரா கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் துணை ஆட்சியராக உள்ளார்.

Thiruvananthapuram:

கேரளாவில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பின்னர் பணிபுரிவதாக அறிவித்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு சுய தனிமைப்படுத்தல் பரிந்துரைக்கப்பட்டது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் துணை ஆட்சியரான அனுபம் மிஸ்ரா, கடந்த வியாழக்கிழமை சிங்கப்பூர் பயணத்தின் பின்னர் கொல்லத்திற்குத் திரும்பினார். மேலும் கொரோனா வைரஸ் பரவுதலையடுத்து வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்களுக்கான நெறிமுறையின்படி சுய தனிமைக்குச் செல்லுமாறு அரசின் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

ஆனால், மிஸ்ரா கொல்லத்தில் இல்லை. அவர் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள அவரது வீட்டில் காணப்பட்டார். இவர் திருமணத்திற்கு பிறகு அதிகாரத்துவ விடுப்பிலிருந்ததாகவும், மலேசியா மற்றும் சிங்கப்பூர் செல்ல அனுமதி பெற்றதாகவும் செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவிக்கின்றது.

"மிஸ்ரா தனது பணியை தொடர மார்ச் 19 அன்று கொல்லத்திற்குத் திரும்பினார், ஆனால் அவர் விடுப்புக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இருப்பினும், வியாழக்கிழமை, அவர் கொல்லத்தில் இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம் அதற்கு பதிலாக, அவர் கான்பூரை அடைந்தார். அவர் 19 ஆம் தேதிதான் புறப்பட்டார் "என்று கொல்லம் கலெக்டர் பி அப்துல் நாசர் என்டிடிவிக்கு தெரிவித்தார்.

மாநில அரசு விளக்கம் கோரிய பின்னர், கலெக்டர், மிஸ்ரா குறித்த அறிக்கையை கேரள அரசிடம் சமர்ப்பித்தார்.

"இது மிகவும் பொறுப்பற்ற நடத்தை. இதைப் பற்றி வேறு என்ன சொல்ல முடியும்? அவர் மீது நடவடிக்கை இருக்கும். அவர் கொல்லத்தில் இல்லை" என்று கேரள மீன்வளத்துறை அமைச்சர் ஜே மெர்சிகுட்டி அம்மா என்.டி.டி.வி யிடம் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் அல்லது கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்த ஒரு நபர் கூட இதுவரை அறிவிக்கப்படாத கேரள மாவட்டங்களில் கொல்லமும் ஒன்றாகும்.

கேரளாவில் 126 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 12 பேர் குணமடைந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். சமீபத்தில் குணமடைந்து வெளியேற்றப்பட்ட ஆறு பேரில் இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் 1.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர், அவர்களில் 601 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துபாயிலிருந்து காசர்கோட்டிற்குத் திரும்பி வந்து நோய் உறுதி செய்யப்பட்ட  நபர் விழாக்களில் கலந்துகொண்டும், குழந்தைகளுடன் கால்பந்து விளையாடியும், வெளியே சாப்பிடுவதற்கும் சுற்றித் திரிந்து தனிமைப்படுத்தலை மீறிவிட்டார். இந்த நிலையில் மாநிலத்தில் அதிகபட்சமாக வழக்குகள் உள்ள கேரளாவின் வடக்கு மாவட்டமான காசர்கோட்டில் சுமார் 70 முக்கியமான சோதனை முடிவுகள் காத்திருக்கின்றன.

.