This Article is From Aug 10, 2019

பவானி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்! கயிறு கட்டி மீட்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி!! #Video

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாதுர்யமாக செயல்பட்ட மீட்பு படையினர் கர்ப்பிணி பெண்ணை மீட்டனர்.

Thiruvananthapuram:

பவானி ஆற்றில் ஏற்பட்ட கனமழையில் சிக்கிய 8 மாத கர்ப்பிணியை மீட்பு படையினர் ரோப் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். இந்தக் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க செய்கிறது. 

மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால் கேரளாவில் உள்ள 15 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். 

இந்த நிலையில், கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள அட்டப்பாடி கிராமத்தில் லாவண்யா என்ற 8 மாத கர்ப்பிணிப் பெண் சிக்கிக் கொண்டார். 

ஒரு கரையில் இருந்த லாவண்யாவை மீட்பு படையினர் ரோப் கயிறு மூலமாக கட்டி, பத்திரமாக மீட்டனர். இதற்காக இரு கரையில் இருக்கும் மரங்களில் கயிறு கட்டப்பட்டது. ஆற்றைக் கடந்து செல்ல, தற்காலிக இருக்கை கயிறுடன் அமைக்கப்பட்டு, அதனைப் பத்திரமாக பிடித்துக் கொண்டவாறு லாவண்யா ஆற்றைக் கடந்தார். இந்த காட்சி மெய்சிலிர்க்கும் வகையில் உள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 40-க்கும் அதிகமானோர் கேரள வெள்ளத்திற்கு உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 
 

.