கேரள வெள்ளம்: கால்நடைகளை விட்டுச் செல்ல மனமின்றி கல்லறையில் வாழ்ந்து வரும் கிராமம்

குட்டநாடு தாலுகாவில் உள்ள கைனகரி புனித மேரி தேவாலயத்தின் கல்லறையிலேயே விலங்குகளோடு தங்கியுள்ள 20 குடும்பங்கள்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கேரள வெள்ளம்: கால்நடைகளை விட்டுச் செல்ல மனமின்றி கல்லறையில் வாழ்ந்து வரும் கிராமம்

இயற்கை எழில் கொஞ்சும் கைனகரி கிராமத்தில் தொலைக்காட்சித் தொடர்கள் பலவும் படம்பிடிக்கப்படுவது வாடிக்கை.


Alappuzha, Kerala: 

ஆலப்புழா மாவட்டத்தின் கைனகரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வீடுகளை விட்டு 20 குடும்ம்பங்கள் தங்களது கால்நடைகளுடன் தேவலாய கல்லறையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தங்கச்சனும் அவரது குடும்பத்தினரும் தங்களது ஆடு மாடுகளை விட்டு தாங்கள் மட்டும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல மறுத்துவிட்டனர். இதனால் அவர்கள் குட்டநாடு தாலுகாவில் உள்ள கைனகரி புனித மேரி தேவாலயத்தின் கல்லறையிலேயே விலங்குகளோடு தங்கியுள்ளனர்.

“கல்லறையில் தங்குவதில் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. எனது தந்தை, அக்கா என உறவினர்கள் பலரும் இறந்து இங்குதான் புதைக்கப்பட்டுள்ளனர். இது அவர்களது கடைசி ஓய்விடம். எங்களுக்கு பசுமாடுகள், ஆடுகள் எனக் கால்நடைகள் உள்ளன. அவற்றை விட்டு நாங்கள் எங்கும் போக விரும்பவில்லை” என்கிறார் தங்கச்சன்.

தற்போது இக்கல்லறையில் இருபது குடும்பங்கள் இவர்களைப் போலவே தங்கியுள்ளன. மீன் உள்ளிட்ட கைக்குக் கிடைப்பவற்றை இவர்கள் உணவு சமைத்து வருகின்றனர். எனினும் தண்ணீருக்குத் திண்டாட்டமாக உள்ளது. ஆலப்புழாவில் கிடைக்கும் பாட்டில் தண்ணீரை நம்பித்தான் இருக்கின்றனர்.

பம்பை ஆறு உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் ஐந்து ஆறுகள் கைனகரியில் உள்ள வேம்பநாடு ஏரியில் வடிகின்றன. இந்த ஏரி படகுப் போட்டிகளுக்கு மிகவும் பிரபலமானதும் கூட. இயற்கை எழில் கொஞ்சும் கைனகரி கிராமத்தில் தொலைக்காட்சித் தொடர்கள் பலவும் படம்பிடிக்கப்படுவதும் வாடிக்கைசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................