This Article is From Aug 25, 2018

கேரள வெள்ளம்: பில் கேட்ஸ் அறக்கட்டளை 4 கோடி நிதி உதவி

நூறாண்டுகளில் இல்லாத மோசமான வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள பல்லாயிரக்கணக்கான கேரள குடும்பங்களுக்கு பில் & மெலிண்டா அறக்கட்டளை அனுதாபம்

கேரள வெள்ளம்: பில் கேட்ஸ் அறக்கட்டளை 4 கோடி நிதி உதவி

மாவட்ட நிர்வாகங்கள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் UNICEF நிறுவனத்துக்கு இந்நிதி அனுப்பிவைக்கப்படும்.

New Delhi:

கேரளத்தில் நடந்து வரும் நிவாரண, மறுவாழ்வுப் பணிகளுக்காக நான்கு கோடி ரூபாய் (600000$) யூனிசெப்புக்கு அளிக்கப்படும் என பில் & மெலிண்டா அறக்கட்டளை அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் தங்கள் வீடுகளை இழந்தோர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வரும் அரசு மற்றும் அரசு தொண்டு நிறுவனங்களின் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த அவசர நிதியுதவி அளிக்கப்படுவதாக அவ்வறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகங்களுடனும் அரசு சாரா அமைப்புகளுடனும் இணைந்து UNICEF கேரளாவில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

"நூறாண்டுகளில் இல்லாத மோசமான வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள பல்லாயிரக்கணக்கான கேரள குடும்பங்களுக்கு பில் & மெலிண்டா அறக்கட்டளையின் சார்பாக எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உள்ளூர் அரசு நிர்வாகங்கள், தொண்டு நிறுவனங்களுடன் யூனிசெப் மேற்கொண்டு வரும் நோயப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எங்களது நிதியுதவி உதவும் என்று நம்புகிறோம்" என்று பில்கேட்ஸ் அறக்கட்டளையின் உலக வளர்ச்சிப் பிரிவின் தலைவர் கிறிஸ் எலியாஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.