கேரள வெள்ளம்: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி திரட்ட ICAI தனி வங்கிக் கணக்கு தொடக்கம்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி திரட்ட ICAI தனி வங்கிக் கணக்கு தொடக்கம்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கேரள வெள்ளம்: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி திரட்ட ICAI தனி வங்கிக் கணக்கு தொடக்கம்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி திரட்ட ICAI தனி வங்கிக் கணக்கு தொடக்கம்.

New Delhi: 

கேரளாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள பாதிப்புகளை அடுத்து பல அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ளன. தற்போது இந்திய பட்டயக் கணக்கர் கழகமான ICAI –உம் கேரள மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது. இதற்காக கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு தனி வங்கிக் கணக்கை சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் அமைப்பு தொடங்கியுள்ளது.

ICAI வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனது உறுப்பினர்கள், மாணவர்கள் என அனைவரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராள மனதுடன் காசோலை மூலமாகவோ டிடி (வரைவோலை) மூலமாகவோ “ICAI Kerala Flood Relief Fund” என்ற பெயருக்கு புது டெல்லியில் பெற்றுக்கொள்ளத்தக்க வண்ணம் நிதியுதவி அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் நிதியுதவி அளிப்பவர்கள் தங்களது முழுப்பெயர், உறுப்பினர்/மாணவர் பதிவெண், முகவரி, தொகை, பணம் செலுத்திய தேதி, பான் கார்டு தகவல் போன்றவற்றை தெரிவித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்குக் கொடையளித்ததற்கான சான்றாக ரசீதினைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான கடிதங்கள்/மின்னஞ்சல்கள் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்.

The Joint Secretary
M&C-MSS
The Institute of Chartered Accountants of India
ICAI Bhawan

A-29, Sector-62
Noida – 201309.

மின்னஞ்சல் முகவரி: mss@icai.in

தொலைபேசி: 0120 - 3876858

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................