குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கேரளப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

அமர்வு தொடங்கியபோது சட்டமன்றத்தில் தனி பாஜக உறுப்பினர் ஓ. ராஜகோபால், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் சிஏஏ சட்டத்தை நிறைவேற்றியுள்ளதால் இது “சட்ட விரோதமானது” என்று கூறி தீர்மானத்தை எதிர்த்தார்.

நாட்டின் மதச்சார்பற்ற கண்ணோட்டத்திற்கும் எதிரானது குடியுரிமை திருத்த சட்டம்.

Thiruvananthapuram:

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து. செய்யக்கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் எஸ்.சி மற்றும் எஸ்.டி இட ஒதுக்கீட்டை இன்னும் பத்தாண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்க ஒருநாள் சிறப்பு அமர்வு கூட்டப்பட்ட போதிலும் பொது மக்கள் மத்தியில் சிஏஏ குறித்த கவலைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தீர்மானத்தை முன்வைக்கும் போது பேசிய பினராயி விஜயன், நாட்டின் மதச்சார்பற்ற கண்ணோட்டத்திற்கும் எதிரானது குடியுரிமை திருத்த சட்டம். குடியுரிமை வழங்குவதில் இந்த சட்டம் மதம் சார் பாகுபாடுகளை பார்ப்பதால் அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு முரணானது. நாட்டின் மக்களிடையே உள்ள பதட்டத்தை கருத்தில் கொண்டு சிஏஏ வை கைவிட்டு அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தை நிலை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த சட்டம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிடையே பரவலான ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்தியாவின் பிம்பத்தை சர்வதேச சமூகத்தின் முன்பு குறைத்து விட்டதாக கூறினார். விஜயன் தென் மாநிலத்தில் எந்தவொரு தடுப்பு காவல் மையங்களும் இருக்காது என்று சட்டமன்றத்திற்கு உறுதி அளித்தார்.  

அமர்வு தொடங்கியபோது சட்டமன்றத்தில் தனி பாஜக உறுப்பினர் ஓ. ராஜகோபால், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் சிஏஏ சட்டத்தை நிறைவேற்றியுள்ளதால் இது “சட்ட விரோதமானது”  என்று கூறி தீர்மானத்தை எதிர்த்தார்.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க டிசம்பர் 29 அன்று முதலமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது சிறப்பு அமர்வை கூட்டி சிஏஏவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் இடது சாரி அரசினைக் கோரியது.