நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரு முதல்வர்களின் சந்திப்பு நடைபெற்றது. முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக இந்த சந்திப்பின்போது முக்கியமாக பேசப்பட்டது.

நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை!!

கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 113 பேர் உயிரிழந்தனர்.

நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழகம் - கேரளா இடையிலான தண்ணீர்ப் பிரச்னை குறித்து பேசப்பட்டது. 

தமிழகம் மற்றும் கேரளா இடையே முல்லைப் பெரியாறு விவகாரம் முக்கிய பிரச்னையாக உள்ளது. இது தொடர்பாக இரு முதல்வர்கள் சந்திப்பின்போது முக்கியமாக பேசப்பட்டது. 

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

கேரளாவும், தமிழகமும் சகோதரர்களைப் போல உள்ளனர். எந்த பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டாலும் அது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். பரம்பிக்குளம் ஆழியார் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக 10 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். இதில் கேரளா மற்றும் தமிழகத்திலிருந்து தலா 5 பேர் இடம்பெறுவார்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். பரம்பிக்குளம் - ஆழியார் ஒப்பந்தம் கடந்த 1970-ல் ஏற்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக கேரளா மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இந்த சந்திப்பின்போது, கேரளாவின் நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணக்குட்டி, வனத்துறை அமைச்சர் கே.ராஜூ, மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம். மானி, தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இரு மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

More News