கென்ய பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!? - குர்கானில் அதிர்ச்சி சம்பவம்!

டெல்லிக்கு அருகில் இருக்கும் குர்கானில் கென்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது

கென்ய பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!? - குர்கானில் அதிர்ச்சி சம்பவம்!

The woman was threatened with dire consequences if she went to the police (representational)

ஹைலைட்ஸ்

  • நேற்றிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது
  • இதுவரை மூவர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்
  • இரண்டு பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது
Gurgaon:

டெல்லிக்கு அருகில் இருக்கும் குர்கானில் கென்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கென்யாவைச் சேர்ந்த பெண், நேற்று குர்கானில் நடக்கும் ஒரு இரவு பார்ட்டிக்குச் சென்றுள்ளார். பார்ட்டி முடிந்து தெற்கு டெல்லியில் இருக்கும் தனது வசிப்பிடத்துக்குச் செல்ல குர்கானின் எம்.ஜி சாலைக்கு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள், கென்ய பெண்ணுக்கு லிஃப்ட் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பி அவரும் வாகனத்தில் ஏறியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளனர் வண்டியில் இருந்தவர்கள். வண்டியை வேறொரு இடத்தில் நிறுத்தி மேலும் இருவரை ஏற்றிக் கொண்டனர். ஐவரும் சேர்ந்து கென்ய பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். பின்னர், அவர்கள் நடு ரோட்டில் பெண்ணை இறக்கிவிட்டு விட்டு இடத்தை காலி செய்துள்ளனர். ஆனால், கென்ய பெண் காரின் பதிவு எண்ணை மனதில் பதியவைத்துள்ளார். இதே நேரத்தில், `போலீஸிடம் சென்றால் உன்னை தீர்த்து விடுவோம்' என்று கென்ய பெண்ணை ஐவரும் மிரட்டியுள்ளனர்.

போலீஸிடம் சென்ற அந்தப் பெண், வண்டியின் பதிவு எண்ணை சொல்லி புகார் அளித்துள்ளார். உடனடியாக களத்தில் இறங்கிய போலீஸ், மூவர் பதுங்கியிருந்த இடத்தைப் கண்டுபிடித்து கைது செய்தனர். இன்னும் இருவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. 

வெளிநாட்டுப் பெண்ணுக்கு நடந்த இந்தக் கொடூர சம்பவத்தால் குர்கான் பகுதியில் பொது மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.