ஸ்டாலினை நாளை சந்திக்கிறாரா சந்திரசேகர் ராவ்?

கடந்த வாரம் சந்திரசேகராவ், கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்தார். அந்த சந்திப்பு மிக முக்கியமான ஒன்று என்றும் கூறினார்.

ஸ்டாலினை நாளை சந்திக்கிறாரா சந்திரசேகர் ராவ்?

பினராய் விஜயனும் தேர்தல் முடிந்தே முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

New Delhi:

தெலங்கான முதல்வர் கே.சந்திர சேகர் ராவ் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க திங்களன்று அனுமதி கேட்டுள்ளார். ஏழாவது கட்ட தேர்தல் நெருங்கும் வேலையில் இந்த சந்திப்பு நிகழவுள்ளது.

சந்திரபாபு நாயுடுவும் ஸ்டாலினை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். அவர் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மாநில கட்சிகளின் தலைமையிலான ஆட்சிக்கு வழி வகுக்கும் விஷயங்கள் குறித்து ஸ்டாலினிடம் பேச முயற்சித்ததாகவும், ஸ்டாலின் அதற்கு இணங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் சந்திரசேகராவ், கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்தார். அந்த சந்திப்பு மிக முக்கியமான ஒன்று என்றும் கூறினார். ஆனால் மற்ற தலைவர்களுடன் அவரால் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியவில்லை. பினராய் விஜயனும் தேர்தல் முடிந்தே முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

பாஜகவுக்கு எதிரான கட்சிகள் மே 21ம் தேதி கூடி பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது உத்திகள் வகுக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.

"நாங்கள் சந்திரபாபு நாயுடுவின் பாதையில் செல்லவில்லை. ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் அவர்கள் எங்களுக்கு எதிரிகள் தான்" என்றார்.

சந்திரபாபு நாயுடு கூறும்போது, "காங்கிரஸ் அல்லது பாஜக அல்லாமல் ஒரு அணி ஆட்சியை அமைப்பது சற்று கடினம்" என்றார். 1996ல் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு த்ந்து மூன்றாவது அணி ஆட்சி அமைத்ததை என்டிடிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இன்னும் மூன்றாவது அணிக்காக வேலைகள் பிரகாசமாகவே உள்ளது என்றும், இது குறித்து சந்திர சேகர் ராவ் மம்தாவை சென்ற வருட இறுதியில் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவர் மம்தாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 21ம் தேதிக்கு முன்பு அவர் சில தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com