This Article is From Feb 22, 2019

புல்வாமா தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்துவதை சீனா எதிர்க்கிறது. புல்வாமா தாக்குதலுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட சீனா, ஒரு இடத்தில் கூட பாகிஸ்தானை கண்டித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 14-ம்தேதி புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 ரிசர்வ் போலீசார் உயிரிழந்தனர்.

ஹைலைட்ஸ்

  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது
  • இந்தியாவுக்கு ஆதரவான வாசகங்கள் இடம்பெற்றதற்கு சீனா எதிர்ப்பு
  • பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்தியா
New Delhi:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் என்றும் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியிருக்கிறது.

ஐ.நா.வின் சக்திமிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு மிகவும் ஆதரவான ஒரு சம்பவமாக பார்க்கப்படுகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

கோழைத்தனமான, கொடூரத்தனமான தாக்குதலை தீவிரவாதிகள் புல்வாமாவில் நடத்தியுள்ளனர். இதில் இந்தியாவின் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.

ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் சர்வதேச விதிகளையும், பாதுகாப்பு கவுன்சில் விதிகளையும் மதித்து நடக்க வேண்டும். இந்திய அரசுக்கும், அவர்கள் தொடர்பான அதிகாரிகளுக்கும் ஐ.நா. உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளிவராமல் இருக்க எவ்வளவு முடியுமோ அந்த அளவு முயற்சிகளை சீனா செய்திருக்கிறது. இதேபோன்று காஷ்மீர் என்று குறிப்பிடாமல் இந்தியா நிர்வாகம் செய்யும் காஷ்மீர் என்றே குறிப்பிட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள, அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற வாசகத்தை நீக்க வேண்டும் என்று சீன அதிகாரிகள் பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்துவதை சீனா எதிர்க்கிறது. புல்வாமா தாக்குதலுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட சீனா, ஒரு இடத்தில் கூட பாகிஸ்தானை கண்டித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.