This Article is From Aug 24, 2019

ஜம்மு காஷ்மீருக்கு ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று பயணம்!!

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஜம்மு காஷ்மீருக்கு செல்கின்றனர். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்  இன்று பயணம்!!

காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என ராகுல் பலமுறை விருப்பம் தெரிவித்திருந்தார்.

New Delhi:

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு பதற்றம் நீடித்து வரும் நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு இன்று செல்லவுள்ளனர். அவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஸ்ரீநகர் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாகவும் காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களை அமைப்பது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

காஷ்மீரில் தற்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மெல்ல மெல்ல தொலைப் பேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. நிலைமை முழுவதும் சீரடைந்த பின்னர் படைக்குவிப்பு திரும்பப் பெறப்படும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள் நாளை காஷ்மீர் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

.