This Article is From Feb 22, 2019

‘’புல்வாமா தாக்குதலை மனதில்கொண்டு காஷ்மீர் சிறப்பு அதிகாரத்தை நீக்க கூடாது’’: நிதிஷ்

அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள 370-வது பிரிவு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக நீண்ட காலமாக கோரி வருகிறது.

‘’புல்வாமா தாக்குதலை மனதில்கொண்டு காஷ்மீர் சிறப்பு அதிகாரத்தை நீக்க கூடாது’’: நிதிஷ்

சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் பிரச்னை இன்னும் தீவிரம் அடையும் என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

Patna:

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலை மனதில் கொண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370-யை நீக்கக் கூடாது என்று பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஒருபக்கம் அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இந்த கோரிக்கையை பாஜக நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார், கூட்டணி கட்சிக்கு மாற்றமான கருத்தை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது-

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை குறித்து மத்திய அரசு நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் நீட்டிக்கப்பட வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும் என்கிற விவாதமே கூடாது. ஒருவேளை சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தால் அது பிரச்னையை இன்னும் தீவிரம் அடைய செய்யும்.

இவ்வாறு நிதிஷ் குமார் கூறியிருக்கிறார். பாஜக கூட்டணியில் இருக்கும் அவர் அக்கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாற்றமான கருத்தை தெரிவித்துள்ளார். இது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துமா என்பது அடுத்து வரும் நாட்களில் தெரியவரும்.

.