This Article is From Jul 31, 2019

நிலச்சரிவால் மண்ணில் புதைந்தவரை உயிரோடு மீட்ட மோப்ப நாய்!!

ஜம்மு காஷ்மீரில் மெகார் நகருக்கு அருகேயுள்ள நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவால் மண்ணில் புதைந்தவரை உயிரோடு மீட்ட மோப்ப நாய்!!

ரிசர்வ் போலீஸ் உதவியுடன் நிலச்சரிவில் சிக்கியவர் மீட்கப்பட்டார்.

Jammu:

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவால் மண்ணில் புதைந்தவர் மோப்ப நாயின் உதவியால் மீட்கப்பட்டுள்ளார். ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே தேசிய நெடுஞ்சாலை ராம்பன் மாவட்டத்தில் செல்கிறது. இங்கு நிலச்சரிவு ஏற்பட்டதில் சிலர் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வந்தன.

இதையடுத்து துணை ராணுவத்தினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வெடிகுண்டை செயலிழக்கம் செய்யும் பிரிவினருடன் மோப்ப நாயும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. 
 


அப்போது நிலச்சரிவில் புதைந்திருந்த ஒருவரை மோப்ப நாய் அடையாளம் காட்டியது. இதையடுத்து போலீஸ் அதிகாரிகளும், துணை ராணுவத்தினரும் விரைந்து சென்று, புதைந்திருந்தவரை சுற்றிலும் இருந்த மணலை அகற்றத் தொடங்கினர். 
 

crf7sago

சில நிமிடங்களுக்கு பிறக்கு அவர் மீட்கப்பட்டார். சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில் மீட்கப்பட்ட பிரதீப் குமா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மீட்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவத்தினரையும், அதற்கு உதவி செய்த மோப்ப நாயையும் மக்கள் பாராட்டி வருகின்றனர். 
 

.