This Article is From Aug 20, 2019

சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்கு; முறையிட்ட கார்த்தி சிதம்பரம்!- பின்னணி என்ன?

வழக்கு எழும்பூரில் இருக்கும் பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்கு; முறையிட்ட கார்த்தி சிதம்பரம்!- பின்னணி என்ன?

தற்போது கார்த்தி சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் பிரதிநிதிகளின் மீதிருக்கும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

Chennai:

கார்த்தி சிதம்பரம் மீது போடப்பட்டிருந்த பழைய வழக்கு ஒன்று, மக்கள் பிரதிநிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. அதற்கு எதிராக அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு, முட்டுக்காடு பகுதியில் இருந்த நிலத்தை விற்றுள்ளார் கார்த்தி சிதம்பரம் எம்.பி. இந்த நிலம் விற்ற விவகாரத்தில் சுமார் 1.35 கோடி ரூபாய் கணக்கில் வரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. அது குறித்து வழக்கும் தொடரப்பட்டது. 

அந்த வழக்கு எழும்பூரில் இருக்கும் பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால், தற்போது கார்த்தி சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் பிரதிநிதிகளின் மீதிருக்கும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்துதான் கார்த்தி, முறையிட்டுள்ளார். மேலும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடையும் கோரியுள்ளார் கார்த்தி. 

இது குறித்து கார்த்தி சிதம்பரம் தரப்பு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆடிகேசவலுவிடம் வழக்கு விசாரணையின் போது எடுத்துக் கூறியது. இதைத் தொடர்ந்து வழக்கை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார் நீதிபதி. மேலும் நீதிபதி, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

கார்த்தி தரப்பில் நீதிமன்றத்தில், ‘வழக்கு தொடரப்பட்டபோது கார்த்தி சிதம்பரம், மக்கள் பிரதிநிதியாக இருக்கவில்லை. இந்த ஆண்டு மே 24 ஆம் தேதிதான் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்' என்றும் வாதாடப்பட்டுள்ளது. 

மக்கள் பிரதிநிதிகளின் மீதிருக்கும் குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கும் நோக்கில் மாநிலம் தோரும் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தது உச்ச நீதிமன்றம். உயர் நீதிமன்றப் பதிவாளரின் பரிந்துரைப்படி, சிறப்பு நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

 
 

.