கர்நாடகாவுக்கு 3 துணை முதல்வர்கள்! துறைகளை ஒதுக்கினார் முதல்வர் எடியூரப்பா!!

கோவிந்த் கர்ஜோல், டாக்டர் அஷ்வந்த் நாராயண் மற்றும் லக்ஷ்மன் சாவதி ஆகியோரை எடியூரப்பா துணை முதல்வர்களாக நியமித்துள்ளார். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கர்நாடகாவுக்கு 3 துணை முதல்வர்கள்! துறைகளை ஒதுக்கினார் முதல்வர் எடியூரப்பா!!

ஒதுக்கப்படாத துறைகள் அனைத்தும் முதல்வர் எடியூரப்பாவிடம் இருக்கும்.


Bengaluru: 

கர்நாடக அரசுக்கு மொத்தம் 3 துணை முதல்வர்களை முதல்வர் எடியூரப்பா நியமித்துள்ளார். அமைச்சர்கள் 17 பேருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் போக மற்றவை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும். 

கர்நாடக அமைச்சரவையில் பெண் ஒருவர் உள்பட மொத்தம் 17 பேர் உள்ளனர். அவர்களில் துணை முதல்வர்களாக கோவிந்த் கர்ஜோல், டாக்டர் அஷ்வத் நாராயண், லக்ஷ்மி சாவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப்பணித்துறை, சமூக நலம் ஆகியவை கர்ஜோலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. டாக்டர் அஷ்வத்துக்கு உயர் கல்வி, தகவல் தொழில் நுட்பம், பயோ டெக்னாலஜி, அறிவியல் டெக்னாலஜி ஒதுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.)மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் கர்நாடகாதான் முன்னணி மாநிலமாக உள்ளது.

அங்கு அந்த 2 துறைகளையும் வைத்திருக்கும் அமைச்சர் முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார். தற்போது இந்த துறைகள் டாக்டர் அஷ்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதல்வர் லக்ஷ்மண் சாவதிக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பசவராஜ் பொம்மைக்கு உள்துறை, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு தொழில்துறை, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சுரேஷ் குமாருக்கு ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளன. 

சுற்றுலா, கன்னட மொழி மற்றும் கலாசார துறை சி.டி. ரவிக்கும், பெண்கள், குழந்தைகள் நலவாழ்வுத்துறை சசிகலா அன்னாசாகிபுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற துறைகள் அனைத்தும் முதல்வர் எடியூரப்பாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................