காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க விரும்பவில்லை : பாதுகாப்பு கோரும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

Karnataka Crisis: “மல்லிகார்ஜுன் கார்கே அல்லது குலாம் நபி ஆசாத் ஜி அல்லது மகாராஷ்டிரா மற்றும் கர்நாடாக காங்கிரஸ் தலைவர் அல்லது வேறு எந்த அரசியல் தலைவரும் எந்தவொரு காங்கிரஸ் பிரமுகர்கள் யாரும் எங்களை சந்திப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை…

காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க விரும்பவில்லை : பாதுகாப்பு கோரும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

Karnataka Political Crisis: கடந்த வாரம் எல்.கே சிவகுமார் ராஜினாமா எம்.எல்.ஏக்களை சந்திக்க முயன்றார் (File)

Mumbai:

கடந்த வாரம் கர்நாடக சட்டமன்றத்தில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் மும்பையில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். 14 சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களை சந்திக்கும் முயற்சியில் மூத்த காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து பாதுகாப்பு தருமாறு மும்பை காவல்துறைக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர்.

கர்நாடாகவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ்- ஜனதா தளம் மதச்சார்பற்ற கூட்டணி அரசாங்கம் ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. 14 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக  காங்கிரஸின் பொதுசெயலாளர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கர்நாடாக துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா ஆகியோர் இன்று காலை போய் ஹோட்டலுக்கு சென்று சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏக்கள் மூத்த காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத்தையும் குறிப்பிட்டுள்ளனர். “மல்லிகார்ஜுன் கார்கே அல்லது குலாம் நபி ஆசாத் ஜி அல்லது மகாராஷ்டிரா மற்றும் கர்நாடாக காங்கிரஸ் தலைவர் அல்லது வேறு எந்த அரசியல் தலைவரும் எந்தவொரு காங்கிரஸ் பிரமுகர்கள் யாரும் எங்களை சந்திப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை… அவர்களிடமிருந்து கடுமையான அச்சுறுத்தலை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

adihnn6o

காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க முயன்றால் அவர்களுக்கு எதிராக ராஜினாமா எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

கடந்த வாரமும் மும்பை காவல்துறையினரிடம் இதே போன்ற புகாரை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 14 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக்கள் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ராஜினாமாக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டால் தற்போது உள்ள கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு.