This Article is From Feb 08, 2020

'இது ஒரு குத்தமா ?' - புடவையின் தரத்தால் நின்றுபோன திருமணம்!!

மணமகன் ரகுகுமார் மற்றும் மணமகள் சங்கீதா ஆகிய இருவரும் கடந்த ஓர் ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர்

'இது ஒரு குத்தமா ?' - புடவையின் தரத்தால் நின்றுபோன திருமணம்!!

இந்த காதல், திருமணத்தில் முடியவே இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • ரகுகுமார் மற்றும் அவரின் பெற்றோர் மீது காவல் நிலையத்தில் புகார்
  • கர்நாடகாவில் 'ஹாசன்' என்ற நகரில் தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது
  • இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது
Bengaluru:

இரு மனம் சேரும் நிகழ்வே திருமணம். இந்த மகிழ்ச்சியான திருமண விழாக்களில் பல வகையான சண்டை சச்சரவுகள் ஏற்படுவதை நாம் கேட்டிருப்போம்... சிலர் பார்த்திருப்போம். ஆனால் கர்நாடகாவில் ஒரு திருமண நிகழ்வில் மணப்பெண்ணின் புடவையின் தரத்தை காரணம்காட்டி அந்தத் திருமணத்தியே நிறுத்தி உள்ளனர் மணமகனின் பெற்றோர். 

கர்நாடகாவில் 'ஹாசன்' என்ற நகரில்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. மணமகன் ரகுகுமார் மற்றும் மணமகள் சங்கீதா ஆகிய இருவரும் கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல், திருமணத்தில் முடியவே இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை அன்று நடந்த திருமண சடங்கு ஒன்றில் அந்த மணப்பெண் அணிந்து வந்தப் புடவையின் தரம் குறைவாக இருந்ததாகவும், அதனை மாற்ற சொல்லியும் மணமகன் வீட்டார் கூறியுள்ளனர். 

ஆனால் இதனை அந்த மணமகள் வீட்டார் கண்டுகொள்ளாத நிலையில், கோபம்கொண்ட அந்த மணமகனின் பெற்றோர் அடுத்த நாள் நடக்கவிருந்த திருமண நிகழ்விற்குத் தங்களது மகனை அனுப்பவில்லை. திருமணம் தடைப்படவே  ஆத்திரம் கொண்ட மணமகளின் பெற்றோர், மணமகன் ரகுகுமார் மற்றும் அவரின் பெற்றோர் மீது காவல் நிலையத்தில் புகார் அதித்துள்ளனர். இது குறித்துப் பேசிய போலீஸ் எஸ்பி., ஸ்ரீனிவாஸ் கவுடா, மணமகனின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகக் கூறினார். 
 

.