கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா : ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள் சமரசம் செய்யப்படுகின்றன

பன்முகத்தன்மை வாய்ந்த ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள் சமரசம் செய்யப்படும் போது அரசு அதிகாரியாக பணியை செய்வது நியாயமற்றது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

சசிகாந்த் செந்தில் 2009 ஆம் தேர்ச்சி பெற்றவர்.


Bengaluru: 

ஹைலைட்ஸ்

  1. ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களில் சமரசம் செய்யப்படுகின்றன
  2. 2009இல் சசிகாந்த் தேர்ச்சி பெற்றார்
  3. சசிகாந்த் செந்தில் தனிப்பட்ட முடிவாக இதனை எடுத்துள்ளார்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் தன் பணியிலிருந்து விலகினார். 

செந்தில் 2009ஆண்டு கர்நாடக கேடர் அதிகாரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தட்சிணா காந்தாவில் பொறுப்பேற்றிருந்தார். இந்நிலையில் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் “பன்முகத்தன்மை வாய்ந்த ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள் சமரசம் செய்யப்படும் போது அரசு அதிகாரியாக பணியை செய்வது நியாயமற்றது. வரவிருக்கும் நாட்கள்,  நாட்டின் அடிப்படையான கட்டமைப்பின் மீது மிகக் கடுமையான சவால்கள் இருக்கும். இம்மாதிரியான நிலையில் ஐஏஎஸ் அதிகாரியாக அல்லாமல் வெளியிலிருந்து நான் பணி செய்வதே அனைவருக்கும் சிறந்ததாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு கண்ணன் கோபிநாதன் என்ற ஐஏஎஸ் அதிகாரி தன் பணியிலிருந்து விலகினார். ஜம்மு காஷ்மீரில் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறிய என் பணியிலிருந்து விலகினார். 

சுதந்திரத்திற்கான உரிமை இல்லாமல் மனித வாழ்க்கைக்கு எந்தவொரு அர்த்தமும் இல்லை என்று கோபி நாதன் கூறினார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................