''ஈவு இரக்கமின்றி கொல்லுங்கள்; பிரச்னை வராது'' - கர்நாடக முதல்வரின் உத்தரவால் பரபரப்பு

தான் பேசியது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி பின்னர் விளக்கம் அளித்திருக்கிறார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிதாக்கி வருகின்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS

மூத்த போலீஸ் அதிகாரியிடம் குமாரசாமி பேசியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Bengaluru: 

ஹைலைட்ஸ்

  1. கட்சி நிர்வாகி கொலைக்கு நடவடிக்கை உத்தரவிட்டுள்ளார் முதல்வர்
  2. இரக்கமின்றி கொல்லுங்கள். அதனால் பிரச்னை ஏதும் வராது என்றார் குமாரசாமி
  3. சர்ச்சை பேச்சுக்கு குமாரசாமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

கர்நாடக முதல்வர் குமாரசாமி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது கட்சி நிர்வாகி ஒருவர் கொல்லப்பட்டதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பேசிய அவர், ''கொலைகாரர்களை இரக்கமின்றி கொல்லுங்கள்; அதனால் பிரச்னை வராது'' என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

கர்நாடகாவில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாண்டியா பகுதியில் நிர்வாகியாக இருந்தவர் பிரகாஷ். இவர் நேற்று மாலை தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்தவர்கள் அவரை இடை மறித்து, வலுக்கட்டாயமாக வெளியே வரச்சொல்லி அவரை அடித்துக் கொன்றனர்.


பின்னர் காரிலேயே அவரது சடலத்தை போட்டு விட்டு அந்த கும்பல் அப்படியே சென்று விட்டது. இந்த விவகாரம் முதல்வர் குமாரசாமிக்கு கிடைத்தபோது, அவர் ஏதோ ஆய்வுப் பணியில் இருந்ததாக தெரிகிறது.

otfi963c

கொல்லப்பட்ட ஐக்கிய ஜனதா தள நிர்வாகி பிரகாஷ்

அப்போது தொலைப்பேசியில் பேசிய குமாரசாமி, ''அவர் (கொல்லப்பட்ட பிரகாஷ்) நல்ல மனிதர். அவரை கொன்றது யார் என்று தெரியவில்லை. கொலைகாரர்களை இரக்கமற்ற முறையில் கொல்லுங்கள். அதனால் எந்த பிரச்னையும் வராது.'' என்று பேசியுள்ளார்.

பத்திரிகையாளர்கள் சிலர் அவரது இந்தப்பேச்சை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டதால், நேற்று நாடு முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து குமாரசாமிக்கு நெருக்கமானவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பிரகாஷ் கொல்லப்பட்டது முதல்வருக்கு உணர்வு ரீதியாக கோபத்தை ஏற்படுத்தியாக அவர்கள் கூறியுள்ளனர்.

முதல்வர் குமாரசாமி கூறுகையில், ''ஒரு முதல்வராக என்னால் இடப்பட்ட உத்தரவு அதுவல்ல. ஒரு கோபத்தில் நான் அவ்வாறு பேசிவிட்டேன். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மேலும் 2 கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர்.'' என்று கூறினார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................