கர்நாடகா : 740 ஏக்கரில் புதிய விமான நிலையம்! எடியூரப்பா திறந்து வைத்தார்!!

நிகழ்ச்சியின்போது கர்நாடக துணை முதல்வர்கள் கோவிந்த் கர்ஜோல், அஷ்வத் நாராயண், லக்ஸ்மன் சாவடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கர்நாடகா : 740 ஏக்கரில் புதிய விமான நிலையம்! எடியூரப்பா திறந்து வைத்தார்!!
Bengaluru:

கர்நாடகாவில் 740 ஏக்கர் அளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா திறந்து வைத்துள்ளார். 

மொத்தம் 230 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவின் கலாபுராகி என்ற இடத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு கர்நாடக பகுதிகளில் மக்கள் நலன், வர்த்தகம் உள்ளிட்டவற்றை குறி வைத்து இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. 

இதனை கடந்த 2008-ல் அமைப்பதற்கு அப்போதைய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டதாகவும், அடுத்து வந்த காங்கிரஸ் அரசால் விமான நிலையம் அமைப்பது 11 ஆண்டுகள் தாமதம் ஆனதாகவும் எடியூரப்பா தெரிவித்தார். 

பிதார், ஹுப்பாளி, தர்வாத், கலாபுராகி, யத்கிர், ராய்ச்சூர், கொப்பால் , பெல்லாரி, பாகல்கோட், பெலகாவி, பீஜப்பூர், கடக், ஹவேரி ஆகிய நகரங்கள் இந்த விமான நிலையத்தால் பலன் பெறும் என்றும் முதல்வர் கூறினார். 

இந்த நிகழ்ச்சியின்போது கர்நாடக துணை முதல்வர்கள் கோவிந்த் கர்ஜோல், அஷ்வத் நாராயண், லக்ஸ்மன் சாவடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

More News