“முஸ்லிம்கள் மசூதிகளில் ஆயுதங்கள் வைத்திருப்பார்கள்!”- பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு!!

ரேணுகாச்சார்யாவின் சர்ச்சைக்குரிய கருத்து பற்றி விசாரணை செய்யப்பட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

“முஸ்லிம்கள் மசூதிகளில் ஆயுதங்கள் வைத்திருப்பார்கள்!”- பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு!!

அவரின் இந்த பேச்சு பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் எஸ்.பிரகாஷ், “ரேணுகாச்சார்யா பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்றார்.

Bengaluru:

கர்நாடகத்தில் ஆளும் பாஜக அரசின் எம்எல்ஏ-வான எம்பி ரேணுகாச்சார்யா, முஸ்லிம்கள் மாநிலத்தில் இருக்கும் மசூதிகளில் கத்தி, அறுவாள், சோடா புட்டி உள்ளிட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

“நமாஸ் செய்வதற்கு பதிலாக, முஸ்லிம்கள் மசூதிகளில் ஆயுதங்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள்,” என்று ரேணுகாச்சார்யா, தேவேநகரே மாவட்டத்தில் நடந்த சிஏஏ ஆதரவுப் பேரணியில் சர்ச்சையாக பேசினார். 

2008 முதல் 2013 வரை கர்நாடகாவில் அமைந்திருந்த பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ரேணுகாச்சார்யா. தற்போது அவர் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக இருக்கிறார். 

சிஏஏவுக்கு ஆதரவாக முஸ்லிமகள், தன் பேச்சைக் கேட்டு வர வேண்டும் என்று சொல்லியிருந்ததாகவும், அப்படி நடக்காததால், தன் சட்டமன்றத் தொகுதியில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி இந்துக்களுக்கு மடைமாற்றப்படும் என்றும் பேசியுள்ளார் ரேணுகாச்சார்யா.

“நாம் முஸ்லிம்களை சமமானவர்களாக நடத்திய பின்னரும் அவர்கள் நம்மை எதிரியாக பார்த்தால், நானும் அவர்களை புறந்தள்ளுவேன். நமது அரசியல் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை அவர்கள் புறக்கணித்தால் அதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்,” என்று தன் உரையின் போது கூறினார் ரேணுகாச்சார்யா.

அவரின் இந்த பேச்சு பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் எஸ்.பிரகாஷ், “ரேணுகாச்சார்யா பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்றார்.

அதே நேரத்தில் பாஜகவின் இன்னொரு செய்தித் தொடர்பாளரான ஜி.மதுசூதனா, “ரேணுகாச்சார்யா என்ன சொன்னார் என்பதையும் அவர் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பதையும் ஆராய்வோம். அதன்படி மசூதிகளில் ஆயுதங்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்,” என்று தெரிவித்துள்ளார்.

ரேணுகாச்சார்யா, முஸ்லிம்கள் சிஏஏ ஆதரவுக் கூட்டத்திற்கு வராதது பற்றி, “ஒரு எம்எல்ஏ-வாக, முஸ்லிம்களை நான் நன்றாகவே நடத்துகிறேன். அவர்களுடன் பழகி, பார்க்கும் போதெல்லாம் டீ, பிஸ்கட் கொடுக்கிறேன். என்னை அவர்கள் விரும்பவில்லை என்றால், நானும் அவர்களை விட்டு விலகியே இருப்பேன். அவர்களின் வாக்குகளைக் கேட்க மாட்டேன்,” என்றார்.

ரேணுகாச்சார்யாவின் சர்ச்சைக்குரிய கருத்து பற்றி விசாரணை செய்யப்பட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

More News