சட்டப்பேரவை தேர்தலுக்காக தயாராக உள்ளோம்: எடியூரப்பா பகீர்!

கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தலில் 26 தொகுதிகளை இழந்ததன் மூலம் ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணி மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்ந்து ஆட்சியை நடத்தினாலும், அது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சட்டப்பேரவை தேர்தலுக்காக தயாராக உள்ளோம்: எடியூரப்பா பகீர்!

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இருப்பதாக கர்நாடகா பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.


Bengaluru: 

மக்களவைத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி கவிழக்கூடும் என ஊகிக்கப்படும் நிலையில், மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து புதிய சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

ஜேடிஎஸ் துணையுடன் ஆட்சி அமைப்பது என்பது இயலாத ஒன்று. குமாரசாமி தலைமையிலான ஏற்கனவே ஒரு அனுபவம் உள்ளது. அதனால், மீண்டும் அந்த தவறை செய்ய தயாராக இல்லை என்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டில், 20-20க்கு என்று உடன்பாட்டில் ஜேடிஎஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த பாஜக பின்னர் தனது ஆதரவை திரும்ப பெற்றது. 

இதனிடையே, நிருபரின் கேள்விக்கு பதிலளித்த எடியூரப்பா, புதிய சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தலில் 26 தொகுதிகளை இழந்ததன் மூலம் ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணி மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்ந்து ஆட்சியை நடத்தினாலும், அது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து, வறட்சி, மற்றும் குடிநீர் பிரச்சனை போன்ற மக்களின் பிரச்சனைகளை தீர்க்காமல், தாங்கள் ஆட்சியை நீடிப்பதை மட்டுமே சிந்தித்துக்கொண்டு இருக்கின்றனர். இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய, ஜூன் 1ம் தேதி ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மாண்டியா மக்களவைத் தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை தோற்கடித்த சுமாலாதா அம்பாரீஷை பாஜகவில் இணைத்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த எடியூரப்பா, அவர் எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் இணையலாம் என்று பதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுமாலாதா கூறும்போது, பாஜகவில் இணைவது தொடர்பாக மாண்டியா தொகுதி மக்களுடன் கலந்தாலோசித்து பின்னர் தான் முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................