கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி!!

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 எம்எல்ஏக்களில் 17 பேர் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அளித்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

தகுதி நீக்கம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதாக சபாநாயகர் கூறியுள்ளார்.


New Delhi: 

கர்நாடகாவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமாக 17 எம்.எல்.ஏக்களில் 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் இருவர் காங்கிரசை சேர்ந்த ரமேஷ் ஜர்கிஹோலி மற்றும் மகேஷ் குமதானல்லி ஆகியோர் ஆவர்.

இவர்கள் இருவரும் இந்த மாத தொடக்கத்தின்போது ராஜினாமா கடிதத்தை அளித்தனர். மற்றவர் ரானே பென்னூர் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் ஆர். சங்கர் ஆவார்.

நடவடிக்கை எடுத்த பின்னர் சபாநாயகர் ரமேஷ் குமார் அளித்த பேட்டியில் 15-வது சட்டசபை கர்நாடகத்தில் கலைக்கப்படும் வரையில் மறு தேர்தல் நடத்த முடியாது. மற்ற ராஜினாமா கடிதங்களை ஏற்க மறுத்து விட்டேன். எல்லோரும் எனது நடவடிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜூலை 31-ம்தேதிக்குள்ளாக நிதி மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். என்றார்.

எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்கப்படாத நிலையில் தற்போது 3 பேரை தகுதி நீக்கம் செய்திருக்கிறார் சபாநாயகர். இதனால் சட்டசபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 222 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு 112 உறுப்பினர்களின் பலம் தேவை என்ற நிலையில், பாஜகவிடம் 105 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த சூழலில் கர்நாடகாவில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வர வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................