உங்களது கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது; மோடிக்கு பதிலடி கொடுத்த ராகுல்!

Lok Sabha elections 2019: எனது தந்தை மீது உங்கள் உள்நம்பிக்கைகளை வெளிப்படுத்துவது உங்களை பாதுகாக்காது என்று அவர் கூறியுள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS

General elections 2019: ராஜீவ் காந்தி குறித்த மோடியின் கருத்துக்கு ராகுல் பதிலடி கொடுத்துள்ளார்.


New Delhi: 

உங்களது கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது என ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எனது மதிப்பை சீர்குலைப்பதற்கே ராகுல் காந்தி ரஃபேல் ஊழல் விவகாரத்தில் என்னை குற்றம்சாட்டி வருகிறார்.

உங்கள் தந்தை, ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று கூறப்பட்ட நிலையில் அவர் ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார். 1980களில் காங்கிரஸ், ஆட்சியின் போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்று, ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. எனினும், இவ்வழக்கில் ராஜீவ் லஞ்சம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை என நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.

எனது செல்வாக்கை சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள், நாட்டில் நிலையற்ற, பலவீனமாக அரசு அமைய வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த மோடி, பிறக்கும் போதே தங்க தட்டில் பிறக்கவில்லை, வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை என ராகுல் ஒப்பிட்டு பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, போர் முடிந்துவிட்டது. உங்களது கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. என் தந்தையைப் பற்றிய உங்கள் உள்நம்பிக்கைகளை பரப்புவது எந்த விதத்திலும் உங்களை பாதுகாக்காது என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதில் அளித்து ட்வீட் செய்திருந்தார். அதில் மோடி எதையும் படிப்பதில்லை என நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................