வீட்டு மின்சார பில்லை கண்டு ஷாக்!

ஒட்டுமொத்த உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான மின்சாரக் கட்டணம் எனக்கு வந்துவிட்டது

 Share
EMAIL
PRINT
COMMENTS
வீட்டு மின்சார பில்லை கண்டு ஷாக்!
Kannauj, Uttar Pradesh: 

ஹைலைட்ஸ்

  1. Abdul Basit has an electricity connection of 2 kilowatts
  2. The exact amount charged to him was Rs. 23,67,71,524
  3. "Seems like I've received the entire bill of Uttar Pradesh," he said

உத்தரப் பிரதேசத்தில் அப்துல் பாசித் என்பவரின் வீட்டு கரண்ட் பில் கட்டணமாக ரூ. 23 கோடி செலுத்த வேண்டும் என்ற பில் வந்தது. இதை கண்டு அவர் அதிர்ந்துபோனார். கன்னூஜ் பகுதியில் உள்ள 2 கிலோவாட்ஸ் இணைப்பு கொண்ட அவரின் வீட்டில் 178 யூனிட்டுகள் ஓடியுள்ளதாக மின்சார வாரியத்தின் ரீடிங் காண்பித்தது.

குறிப்பாக 23 கோடியே 67 லட்சத்து 71 ஆயிரத்து 524 ரூபாயைக் கட்ட வேண்டும் என்று பில் வந்திருந்தது. இதனால் அதிர்ச்சியான அப்துல், மின்சார வாரிய அதிகாரிகளை நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

tv0utfj4

ரீடிங் மீட்டரில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் அது சரிசெய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவு கணக்கிடப்படும் எனவும் அதுவரை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து 'ஏஎன்ஐ' நிறுவனத்திடம் பேசிய அப்துல், ''ஒட்டுமொத்த உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான மின்சாரக்  கட்டணம் எனக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

என்னுடைய வாழ்க்கை முழுவதும் சம்பாதித்தால் கூட என்னால் இத்தொகையைக் கட்ட முடியாது'' என்றார்.
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................