'தலைவி' ஜெயலலிதாவாக களமிறங்கும் கங்கனா ரணாவத்!

ஜெயலலிதாவின் உறவினரான தீபக்கிடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

'தலைவி' ஜெயலலிதாவாக களமிறங்கும் கங்கனா ரணாவத்!

நடிகை கங்கனா ரணாவத் இதற்கு முன்பு கடைசியாக நடித்த படம் மணிகர்னிகா (courtesy team_kangana_ranaut)

Chennai:

நடிகை கங்கனா ரணாவத் இதற்கு முன்பு கடைசியாக நடித்த படம் மணிகர்னிகாவாகும். தற்போது பல மொழிகளில் வெளிவரவுள்ள முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரான ஜெயலலிதாவின் பயோபிக்கான ‘தலைவி' படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கங்கனாவின் பிறந்த நாளின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனாவே நடிக்கவுள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஜெயலலிதாவின் 71 வது பிறந்த நாள் விழாவையொட்டி இயக்குநர் ஏ.எல் விஜய் அறிவித்தார். விஷ்ணு துறை தயாரிக்கவுள்ள நிலையில் தலைவி படம் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை துவங்கவுள்ளது.

இந்த பயோபிக் ஹிந்தி மொழியில் ஜெயா என்ற பெயரில் வெளிவரவுள்ளது என்று வர்த்தக ஆலோசகர் தரண் ஆதர்ஸ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விஜய் ஐஏஎன்எஸ்க்கு அளித்த பேட்டியில் “தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்குவதற்கான வாய்ப்பை என்னிடம் வழங்கிய போது உற்சாகத்தை விட பொறுப்புணர்வுதான் அதிகரித்தது. இது ஒரு சாதனையாளரின் கதை ஆணாதிக்க உலகில் போராடிய ஒருபெண்ணின் வாழவை நேர்மையாக சொல்லப்பட வேண்டியிருந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கையில் உள்ள தைரியம் என்னை ஊக்கப்படுத்தியது என்று இயக்குநர் விஜய் தெரிவித்தார்.

ஜீ.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். பாகுபலி மற்றும் மணிகர்னிகா படத்தை எழுதிய கே.வி விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

“ 9 மாத ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 20 ஸ்க்ரிப்ட்களை சரிபார்த்து விஜயேந்திர பிரசாத் உதவியுடன் இந்த ஸ்கிர்ப்ட் உருவாகியுள்ளது. இது மிக நேர்மையான பயோபிக்காக இருக்கும் என்று விஜய் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மற்றொரு பயோபிக் தி அயர்ன் லேடி என்ற பெயரில் வெளிவரவுள்ளது. இந்த படம் 2020ல் வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது. நித்யா மேனன் இதில் ஐயன் லேடியாக நடிக்கவுள்ளார். பிரியதர்ஷினி இயக்கவுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளிவரவுள்ளது.

தலைவி படம் ஜெயலலிதாவின் வாழ்க்கையின் அதிகாரப்பூர்வ வாழ்க்கைப்படமாக இருக்கும் என்றார். ஜெயலலிதாவின் உறவினரான தீபக்கிடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

“தீபக்கிற்கு நன்றி சொல்ல வேண்டும். நடிகர் மற்றும் பிற கலைஞர்களை தேர்வு செய்து முடித்து விட்டோம் ஏப்ரலில் வெளியாகவுள்ளது” என்றும் தெரிவித்தார். 

ஹைலைட்ஸ்

  • ஹிந்தியிலும் இந்தப் படம் உருவாகவுள்ளது
  • இயக்குநர்ந் ஏ.எல் விஜய் இயக்குகிறார்.
  • கே.எல். விஜயேந்திர பிரசாத் இதற்கு உதவியுள்ளார்
More News