ஜெயலலிதா போன்ற தோற்றத்திற்காக என்னவெல்லாம் செய்தேன் தெரியுமா..? : மனம் திறக்கும் கங்கணா

இயக்குநர் ஏ.எல். விஜய் ஜெயலலிதா போன்ற தோற்றமே வேண்டுமென கேட்டுக் கொண்டதால் இவற்றைச் செய்ததாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா போன்ற தோற்றத்திற்காக என்னவெல்லாம் செய்தேன் தெரியுமா..?  : மனம் திறக்கும் கங்கணா

தலைவி பட போஸ்டர். (Image courtesy: team_kangana_ranaut)

ஹைலைட்ஸ்

  • கங்கணா தலைவி படத்திற்காக 6 கிலோ எடை அதிகரித்துள்ளார்
  • எடை அதிகரிக்க அதிக உணவு எடுத்துக் கொண்டதாக கூறினார்
  • தலைவி படம் ஜூன் 2020 வெளியாகவுள்ளது
New Delhi:

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி'படத்தில் வெளியாகவுள்ளது. நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். அதற்காக சில ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொண்டதான மிட்-டே இதழுக்காக வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். “குறிப்பாக வயிறு மற்றும் தொடைகளைச் சுற்றிலும் தோற்றத்திற்காக தேவைப்பட்டது” உடல் எடை அதிகரிக்க அதற்கேற்ற உணவுகளை சாப்பிடத் தொடங்கினேன். லேசான அளவிலான ஹார்மோன் மாத்திரைகளை எடுக்க வேண்டியிருந்தது என்று தெரிவித்துள்ளார். 

இயக்குநர் ஏ.எல். விஜய் ஜெயலலிதா போன்ற தோற்றமே வேண்டுமென கேட்டுக் கொண்டதால் இவற்றைச் செய்ததாக தெரிவித்துள்ளார். 

“ஜெயலலிதா அவர்கள் தனது வாழ்க்கையில் கடுமையான உடல் மாற்றத்தை எதிர்கொண்டார். பரத நாட்டிய நடனக் கலைஞராக வளர்ந்தவர் கண்ணாடி போன்ற பளபளப்பான உருவம் கொண்டிருந்தார். அரசியலுக்கு பின் ஏற்பட்ட விபத்தில் அதிக அளவில் ஸ்டெராய்டுகள் எடுக்க வேண்டியிருந்தது. அதெயெல்லாம் சித்தரிக்க விரும்பியதால் நானும் ஹார்மோன் மத்திரைகளை எடுத்துக் கொண்டேன்.” என்று தெரிவித்தார். 

தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை கீழே காணலாம். 

கங்கனாவின் தோற்றத்தை பார்த்து பலரும் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். 

தலைவி படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளீயாகவுள்ளது