திசை மாறும் இந்து அமைப்பின் நிறுவனர் கொலை வழக்கு: பயங்கரவாதிகள் தாக்குதலா?

Kamlesh Tiwari Case: இதுதொடர்பாக போலீஸ் டைரக்டர் ஜெனரல் ஓ.பி.சிங் கூறும்போது, பயங்கரவாத தாக்குதல் என்ற கோணத்தை நிராகரிக்க மறுத்துவிட்டார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
திசை மாறும் இந்து அமைப்பின் நிறுவனர் கொலை வழக்கு: பயங்கரவாதிகள் தாக்குதலா?

Kamlesh Tiwari murder: சிசிடிவியில் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க உதவியுள்ளது.


New Delhi: 

உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான ஹிந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி கழுத்து அறுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்து 3 நாட்கள் கடந்த நிலையில், காவல்துறையினர் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. 

இதனிடையே, கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்ததில் அதிலுள்ள இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேர் மீது சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அந்த வீடியோவில், அவர்களது கையில் ஸ்வீட் கவர்களுடன் வீட்டிற்குள் செல்கின்றனர். அவர்கள் தீபாவளிக்கு இனிப்புகள் வழங்க செல்வதாக கூறி வீட்டிற்குள் சென்றிருக்க வேண்டும் என்றும் ஸ்வீட் பைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்து எடுத்து சென்றிருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகித்தனர். 

அதில், ஒருவர் காவி நிற குர்தாவும், மற்றொருவர் சிவப்பு நிற குர்தாவும் அணிந்துள்ளனர். அந்த பெண் சிவப்பு நிற குர்தா அணிந்து வெள்ளை நிற துப்பட்டாவுடன் உள்ளார். மேலும், இந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேகிக்கப்படும் அந்த நபர்கள் யார் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடேய, தொடர்ந்து நடந்த விசாரணையில் குற்றவாளிகள் பல தடயங்களை விட்டுச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. ரத்தம் படிந்த துணிகள், கத்திகள் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் உண்மையான முகவரி மற்றும் பெயர்களை கொடுத்து ஹோட்டலில் அறை எடுத்துள்ளனர். 
 

6vihb1eg

குற்றவாளிகள் விட்டுச் சென்ற ஆடைகள் கொலை செய்ததற்கான ஆதாரத்தை காட்டுகிறது. 


இதுதொடர்பாக போலீஸ் டைரக்டர் ஜெனரல் ஓ.பி.சிங் கூறும்போது, பயங்கரவாத தாக்குதல் என்ற கோணத்தை நிராகரிக்க மறுத்துவிட்டார். கடந்த சனிக்கிழமையன்று அவர் இந்த கொலை ஒரு "தீவிரமான கொலை" என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார். வெள்ளிக்கிழமை, லக்னோவின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த கொலை "தனிப்பட்ட பகைமை வழக்கு" என்று விவரித்தார்.

இதை நாங்கள் எல்லா கோணங்களிலிருந்தும் பார்க்கிறோம். மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும் போது நாங்கள் செய்வோம் உண்மையை அறிந்து கொள்ளுங்கள் "என்று டிஜிபி ஓபி சிங் இன்று என்டிடிவிக்கு தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் இந்து சமாஜ் கட்சியை கடந்த 2015-ல் கமலேஷ் திவாரி தொடங்கினார். தனது சர்ச்சை மிகுந்த பேச்சுக்களால் மாநிலம் முழுவதும் அவர் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். பல்வேறு வழக்குகளில் சிக்கிய அவரை, போலீசார் தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனை எதிர்த்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. 

இந்த நிலையில் லக்னோவில் உள்ள அவரது வீட்டில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேரில் பார்த்த சாட்சியங்களின் அடிப்படையில் 2 பேர் அவரை சந்தித்து பேசியுள்ளனர். ஒருவர் காவித்துண்டு அணிந்திருக்கிறார். இன்னொருவர் தீபாவளி இனிப்புகளை கமலேஷிடன் வழங்கி பேசிக் கொண்டிருக்கிறார். 

சிறிது நேரத்திற்கு பின்னர், கமலேஷின் கழுத்தை அறுத்த இருவரும், அவரை பலமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதன்பின்னர் அவர்கள் தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த கமலேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச காவல்துறை தலைவர் ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார். முதல்கட்ட தகவலின் அடிப்படையில் கொலை செய்தவர்கள் கமலேசுக்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

ஏனென்றால் கொலை செய்வதற்கு முன்பாக கமலேசுடன் குற்றவாளிகள் 36 நிமிடங்கள் பேசியுள்ளனர். குற்றவாளிகளை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. 

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................