"இது சர்வாதிகார செயல்" - யோகேந்திர யாதவ் கைதுக்கு கமல் கண்டனம்

யோகேந்திர யாதவின் கைதிற்கு மக்கள் நீதி மையக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
Chennai: 

திருவண்ணாமலை மாவட்டத்தில், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளை நேரடியாக சந்திக்கவும் தகவல் திரட்டவும் சென்ற சுய ஆட்சி இந்தியா கட்சியின் அகில இந்தியத் தலைவர் யோகேந்திர யாதவை தமிழக காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் யோகேந்திர யாதவ் வெளியிட்டிருந்த பதிவில், “எங்களுக்கு வந்த அழைப்பின் பேரில், 8 வழிச்சாலைக்கு எதிராக போராடும் விவசாயிகளைக் காண திருவண்ணாமலை வந்தோம். ஆனால், தமிழக காவல் துறையினர் விவசாயிகளை காண தடை விதித்தனர். மேலும், எங்களது கைப்பேசிகளை கைப்பற்றி, வலுக்கட்டாயமாக காவல் துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர்” என்று பதிவு செய்திருந்தார்

யோகேந்திர யாதவின் கைதிற்கு மக்கள் நீதி மையக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “நம் விவசாயிகளிடம் கருத்து கேட்க வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ள யோகேந்திர யாதவின் கைது விமர்சனத்துக்குரியது. கடும் கண்டனத்திற்குரியது. சட்டத்தை காரணமாக கூறி குரல்கள் ஒடுக்கப்படுவது சர்வாதிகார செயல்” என்று தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தங்களுடைய கருத்துக்களை பயமின்றி வெளிப்படுத்தும் சூழல் உண்டாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

10,000 கோடி ரூபாய் செலவில் உருவாக உள்ள சென்னை - சேலம் இடையேயான எட்டு வழிச் சாலை திட்டத்தினால், விவசாய நிலங்களும், மரங்களும் அழிக்கப்படும் என்பதற்காக இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................