This Article is From Feb 20, 2019

‘மூப்பனாருக்கு எதிராக த.மா.கா!’- காங்கிரஸ் தலைவர் வருத்தம்

அதிமுக - பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைய வாய்ப்புளதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

‘மூப்பனாருக்கு எதிராக த.மா.கா!’- காங்கிரஸ் தலைவர் வருத்தம்

திமுக-வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவெடுத்துவிட்டோம்- அழகிரி

ஹைலைட்ஸ்

  • இன்று திமுக கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும்
  • காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிந்துவிடும்
  • காங்கிரஸுக்கு 9 இடங்கள் ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல்

அதிமுக - பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைய வாய்ப்புளதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. இந்த செய்தி வருத்தமளிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘திமுக-வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவெடுத்துவிட்டோம். இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். தொகுதி பங்கீட்டில் எந்தப் பிரச்னையும் இல்லை' என்று கூறினார். 

தொடர்ந்து அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி குறித்து பேசிய அவர், ‘தேர்தல் அறிக்கை வந்தால்தான், அவர்கள் யார் என்று நமக்குத் தெரியும். அது ஒரு பொறுத்தமில்லாத கூட்டணி. இந்திய மக்களுக்கு எதிராகவும் தமிழக மக்களுக்கும் எதிராகவும் அமைந்துள்ள கூட்டணி. எங்களது கூட்டணி மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டது. எந்த காரணத்தைக் கொண்டும் மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ வரும் பிரவினையை எங்கள் கூட்டணி அனுமதிக்காது. அப்படிபட்ட கருத்துகளுக்கு எதிராக எங்கள் கூட்டணி செயல்படும்' என்றார். 

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைய வாய்ப்புள்ளதாக வரும் செய்திகள் குறித்து பேசிய அழகிரி, ‘இந்த செய்தி வருத்தமளிக்கிறது. தலைவர் மூப்பனார், பாஜக-வோடு ஒன்றிணையக் கூடாது என்று உறுதியாக இருந்தவர். நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது கூட, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக-வுக்கு எதிராகத்தான் வாக்களித்தது. அப்படிப்பட்ட கட்சி இன்று பாஜக-வோடு கை கோர்ப்பது, சரியல்ல' என்று கூறினார். 


 

.