வல்லபாய் படேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

உலகிலேயே மிகவும் உயரமான முறையில் 182 மீட்டர் உயரத்திற்கு சர்தார் வல்லபாய் சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வல்லபாய் படேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

குஜராத் அமைச்சர் தலைமையிலான குழுவினர் தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அழைப்பிதழை அளித்தனர்.


Chennai: 

குஜராத் மாநிலத்தின் நர்மதா ஆற்றின் அருகே சாது பெட் தீவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான சிலையாக இது கருதப்படுகிறது.

நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒருங்கிணைப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். எனவே இந்த சிலை ஒற்றுமையின் அடையாளமாக அழைக்கப்பட்டு வருகிறது.

இதனை பிரதமர் நரேந்திர மோடி வரும் 31-ம்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதுதொடர்பான விழாவில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குஜராத்தின் சுற்றுலா மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கனபத் வசாவா தலைமையிலான குழு ஒன்று தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்தது. அப்போது சர்தார் படேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ் முதல்வர் பழனிசாமியிடம் அளிக்கப்பட்டது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................