This Article is From Apr 20, 2019

“நீதித்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது” : பாலியல் குற்றச்சாட்டை மறுத்த தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு பொதுச் செயலாளர் சஞ்சீவ் சுகக்கர் கல்கோன்கர் கூறுகையில், “ அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை. ஆனாலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். 

“நீதித்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது” : பாலியல் குற்றச்சாட்டை மறுத்த தலைமை நீதிபதி

தனக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார் நீதிபதி ரஞ்சன்கோகாய். (File)

New Delhi:

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டினை மறுத்துள்ளார். மேலும் “நீதித்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு நீதிமன்ற அமர்வு ஒருபெண் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு மனுவை விசாரித்தது. 

விசாரணையில் “இந்த தரக்குறைவான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை” என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குற்றச்சாட்டுகளுக்குப் பின் பெரிய சதித்திட்டம் உள்ளது இதற்கு பின்னால் பெரிய சக்தி ஒன்று உள்ளது. என்னை தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலக்க இந்த சதித்திட்டம் அரங்கேறுகிறது என்று தெரிவித்தார். 

அடுத்தவாரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிப்பது இந்த குற்றச்சாட்டினால் முடங்கி விட்டதாக தெரிவித்தார். “எந்தவொரு பயமும் இல்லாமல் என் நீதிபதி நாற்காலியில் அமர்ந்து பணி செய்ய விரும்புகிறேன்”என்று அவர் கூறினார். 

“என் வங்கி கணக்கில் 6.8 லட்சம் மட்டுமே உள்ளது. ஆனால் என் உதவியாளர் வங்கிக்கணக்கில் இதைவிட அதிகமாக இருக்கும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை நீதிபதிக்கு கிடைத்த வெகுமதி இதுதான் ?” என்று அவர் கூறினார்.

 உயர் நீதிமன்ற நீதிபதிக்கு முன் வழக்கறிஞர் ஜெனரல் துஷார் மேத்தாவின் வழக்குறைக்குப் பின் தலைமை நீதிபதிக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் தொடர்பான் குற்றச்சாட்டு குறித்து சிறப்பு அமர்வு உருவாக்கப்பட்டது. 

உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு பொதுச் செயலாளர் சஞ்சீவ் சுகக்கர் கல்கோன்கர் கூறுகையில், “ அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை ஆகும். ஆனாலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். 

.