This Article is From Jul 02, 2019

''தமிழகத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க வேண்டும்'' - பாஜக தலைமை முடிவு!!

பாஜக உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி வரும் 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

''தமிழகத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க வேண்டும்'' - பாஜக தலைமை முடிவு!!

ஆகஸ்ட் 11-ம்தேதி வரையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

New Delhi:

தமிழகத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று பாஜக தலைமை முடிவு செய்திருக்கிறது. வரும் 6-ம்தேதி முதல் நாடுமுழுவதும் உறுப்பினர் சேர்க்கை திட்டம் தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்திற்கான இலக்கை வகுத்துள்ளது பாஜக தேசிய தலைமை.

6-ம்தேதி உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் ஆகஸ்ட் 11-ம்தேதி வரை செயல்படுத்தப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கை திட்டத்திற்கு மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பொறுப்பு ஏற்றுள்ளார். 

தற்போது வரை 11 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்று பாஜக தெரிவித்துள்ளது. இதனை குறைந்தபட்சம் 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று அக்கட்சி திட்டமிட்டுள்ளது. 

குறிப்பாக தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற பாஜக வலிமை குறைவாக இருக்கும் மாநிலங்களில் 50 சதவீதம் உறுப்பினர்களை கூடுதலாக சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி வாரணாசியில் தொடங்கி வைக்கிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.

.