This Article is From Jun 17, 2019

பாஜக செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்

முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக ஜே.பி. நட்டா பொறுப்பு வகித்திருக்கிறார்.

சமீபத்தில் பாஜகவில் வெளியான பெரும் அறிவிப்பாக இது பார்க்கப்படுகிறது.

New Delhi:

பாஜக செயல் தலைவராக கட்சியின் மூத்த தலைவர் ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்திருக்கிறார். பாஜகவில் சமீபத்தில் வெளியான அறிவிப்புகளில் இது முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. 

பாஜக தேசிய தலைவராக இருக்கும் அமித் ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் அவர் கட்சியின் தலைவர் பொறுப்பில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு அடுத்த 6 மாதங்களுக்கு அவர்தான் கட்சித் தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், மத்திய அமைச்சராக இருக்கும் அமித் ஷா, கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக உயர் மட்டத்தில் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஜே.பி. நட்டாவை செயல் தலைவராக அறிவித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், 'அமித் ஷாவின் தலைமையின் கீழ் பாஜக பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அவரை உள்துறை அமைச்சராக பிரதமர் நரேந்திர  மோடி நியமித்திருக்கிறார். அமித் ஷாவும், கட்சித் தலைவர் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.  இந்த நிலையில் பாஜகவின் ஆட்சிமன்ற குழு ஜே.பி. நட்டாவை செயல் தலைவராக நியமித்துள்ளது' என்று கூறியுள்ளார். 

.