குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பு பொருட்களை திரும்ப பெற்ற Johnson & Johnson நிறுவனம்

Johnson & Johnson :ஆன்லைனில் வாங்கப்பட்ட ஒரு பவுடர் டப்பாவிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஆஸ்பெஸ்டாஸ் உள்ளதை அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளார்கள் கண்டறிந்தனர்

குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பு பொருட்களை திரும்ப பெற்ற Johnson & Johnson நிறுவனம்

Johnson & Johnson : நிறுவனம் அமெரிக்க சுகாதார மையத்துடன் இணைந்து சோதனை முடிவுகளை அறிந்து கொள்ள முன்வந்துள்ளது.

அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்  குழந்தைகளுக்கான பவுடர் சுமார் 33,000 பாட்டில்களை திரும்ப பெற்றுள்ளது. 

ஆன்லைனில் வாங்கப்பட்ட ஒரு பவுடர் டப்பாவிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஆஸ்பெஸ்டாஸ் உள்ளதை அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளார்கள் கண்டறிந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக குழந்தைகளுக்கான பொருட்களில் ஆஸ்பெஸ்டாஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்பெஸ்டாஸினால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு தயாரிப்புகளில் ஆயிரக்கணக்கான வழக்குகளை எதிர்கொண்டுள்ள 130 ஆண்டுகளுக்கும் மேலான அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டுமையம் ஆஸ்பெஸ்டாஸ் உள்ளது என்பதை அதிர்ச்சியுடன் முடிவினை வெளியிட்டுள்ளது. 

ரிஸ்பெர்டலின் விளைவின் அபாயங்களை  ஜான்சன் & ஜான்சன் குறைவாக மதிப்பிட்டதற்காக ஒரு வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 8 பில்லியன் டாலர் செலுத்துமாறு உத்தரவிட்டார். 

ஜான்சன் பேபி பவுடர் உள்ள அதன் தயாரிப்புகள் தங்களது புற்றுநோயை ஏற்படுத்தியதாகக் கூறி வாடிக்கையாளர்களிடமிருந்து 15,000க்கும் மேற்பட்ட வழக்கினை ஜான்சன் & ஜான்சன் எதிர்கொள்கிறது. 

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அந்நிறுவனத்தின் மருத்துவ பாதுகாப்பு அமைப்பில் மகளிர் சுகாதார தலைவர் டாக்டர் சூசல் நிக்கல்சன் ஆஸ்பெஸ்டாஸ் கண்டுபிடிப்பு மிகவும் அசாதாரணமான ஒன்று. இது இன்றுவரை எங்கள் சோதனைக்கு முரணானது என்று கூறினார்.

இந்த சம்பவத்தினால் ஜான்சன் & ஜான்சன் பங்குகள் 6%க்கும் அதிகமான சரிவை சந்தித்தது 98.7 பவுண்டாக சரிந்தன. 

More News