இஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை!! விண்ணப்பிக்க நவம்பர் 4 கடைசிநாள்!

மொத்தம் 327 இஞ்சினியரிங் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.isro.gov.in -ல் சென்று விண்ணப்பிக்கலாம்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை!! விண்ணப்பிக்க நவம்பர் 4 கடைசிநாள்!

எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


New Delhi: 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, 327 இஞ்சினியரிங் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பம் இஸ்ரோவின் இணையதளமான https://www.isro.gov.in  –ல் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கு நவம்பர் 4-ம்தேதி கடைசி நாளாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் B.E/ B.Tech முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு நவம்பர்4-ம்தேதியை கணக்கிடும்போது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினர், உடல்நல பாதிப்பால் ஓய்வூதியம் பெறுபவர் உள்ளிட்டோருக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தொகை ரூ. 100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத் தொகை செலுத்த நவம்பர்6-ம்தேதி கடைசி நாளாகும்.

எழுத்து மற்றும் நேர்முகம் என 2 தேர்வுகள் மூலமாக தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுத்துத்தேர்வு  2020 ஜனவரி 12-ம்தேதி நடைபெறுகிறது. Objective Type முறையில் 80 கேள்விகள் தேர்வில் இடம்பெறும்.

எழுத்துதேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................