This Article is From Jan 09, 2020

JNU மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்த பாலிவுட் பிரபலங்களுக்கு கேள்வியை முன் வைக்கும் துணைவேந்தர்

பிரபல பாலிவுட் நடிக தீபிகா படுகோன், சோனம் கபூர், இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

JNU மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்த பாலிவுட் பிரபலங்களுக்கு கேள்வியை முன் வைக்கும் துணைவேந்தர்

பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சரிவர செயல்படவிலை என்று பல்வேறு வகையிலும் விமர்சனங்கள் ஜெகதீஷ் குமார் மீது எழுந்து வருகிறது.

New Delhi:

ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த மர்ம் கும்பல் ஆசிரியர்களையும் மாணவர்களையும் கடுமையாக தாக்கியது. இதற்காக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட்டின் பல முக்கிய பிரபலங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டது பல அதிர்வலைகளை உருவாக்கியது.

பிரபல பாலிவுட் நடிக தீபிகா படுகோன், சோனம் கபூர், இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சரிவர செயல்படவிலை என்று பல்வேறு வகையிலும் விமர்சனங்கள் ஜெகதீஷ் குமார் மீது எழுந்து வருகிறது.

4bmvfsig

ஜே.என்.யு மாணவர் சங்கமும்  துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் மீது குற்றச்சாட்டினை வைத்தது. இந்நிலையில் நேற்றைய போராட்டத்திற்கு வந்த பாலிவுட் திரை உலகினரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார். “போராட்டக்காரர்களை ஆதரிக்க வந்த சில ஆளுமைகள் அனைவரையும் நான் கேட்க விரும்புகிறேன். ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் செய்வதற்கான உரிமைகளை இழந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அவர்களுடன் நீங்கள் ஏன் நிற்க முடியாது” என்று கேள்வி கேட்டுள்ளார் என்று செய்தி முகமையான ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. 

“நாம் நம்மை வெளிப்படுத்த பயப்படவில்லை என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நம் நாட்டையும் அதன் எதிர்காலத்தையும் பற்றி நாங்கள் சிந்திக்கிறோம்” என்று பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த நாளில் NDTVக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். 

.

.