ஜியோ வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்! IUC Top up Voucher!!

வாடிக்கையாளர்களுக்கு போன் கால்களை இலவசமாக வழங்கி வந்த ஜியோ நிறுவனம், ஜியோவில் இருந்து மற்ற மொபைல் நெட்வொர்க்குகளுக்கு செய்யப்படும் கால்களை கட்டணமாக்கியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஜியோ வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்! IUC Top up Voucher!!

ஜியோவின் நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


மற்ற மொபைல் நெட்வொர்க்கிற்கான அழைப்புகளை ரிலையன்ஸ் ஜியோ கட்டணமாக்கியுள்ள நிலையில் ஐ.யு.சி. டாப் அப் வவுச்சர்களை (IUC Top up Voucher) ஜியோ அறிவித்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு-

ஜியோ ரூ. 10 டாப் அப்

இந்த பிளானின் படி ஜியோவைத் தவிர்த்து மற்ற மொபைல் நெட்வொர்க்கை 124 நிடத்திற்கு இலவசமாக தொடர்பு கொள்ள முடியும். கூடுதலாக 1 ஜி.பி. டேட்டா கிடைக்கும். 

ஜியோ ரூ. 20 டாப் அப்

மற்ற நெட்வொர்க்கை 249 நிமிடங்களுக்கு இலவசமாக தொடர்பு கொள்ள முடியும். கூடுதலாக 2 ஜி.பி. டேட்டா கிடைக்கும். 

ஜியோ ரூ. 50 டாப் அப்

656 நிமிடங்களுக்கு ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்கை தொடர்பு கொள்ள முடியும். எக்ஸ்ட்ரா 5 ஜி.பி. டேட்டா. 

ஜியோ ரூ. 100 டாப் அப்

மற்ற நெட்வொர்க்கை 1362 நிமிடங்களுக்கு இலவசமாக தொடர்பு கொள்ளலாம். கூடுதலாக 10 ஜிபி டேட்டா கிடைக்கும். 

ஜியோவில் இருந்து மற்ற ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட மற்ற நெட்வொர்க்கிற்கான அழைப்புகள் இதுவரை இலசமாக வழங்கப்பட்டு வந்தது. இதனை நிமிடத்திற்கு 6 பைசா என்ற கட்டண முறைக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மாற்றியுள்ளது. 

ஜியோவை பின்பற்றி மற்ற ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் கட்டண அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தற்போது வரை இந்த நெட்வொர்க்குகளில் அழைப்புகள் இலவசமாக வைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................