மனைவியின் அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்தி உப்பை தடவிய கணவன் கைது

காயமடைந்த பெண் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
மனைவியின் அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்தி உப்பை தடவிய கணவன் கைது

இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உட்பட மூன்று மைனர் குழந்தைகள் உள்ளனர் (Representational)


Ramgarh: 

ஜார்கண்டின் ராம்கர் மாவட்டத்தில் ஒருவர் கத்தியால் மனைவியின் அந்தரங்க உறுப்பில் குத்தி பின் காயத்திலே உப்பினை தேய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  

உஸ்ரோ -சோசோ என்ற கிராமத்தில் புதன்கிழமை இரவு சிவசங்கர் என்ற நபர் தன்மனைவியின் அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். அதன் காயத்திலே உப்பை அள்ளித் தேய்க்கவும் செய்துள்ளார். 

காயமடைந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் கைது செய்யப்பட்டார். காயமடைந்த பெண் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று டி.எஸ்.பி தெரிவித்துள்ளார். சிவசங்கர் சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உட்பட மூன்று மைனர் குழந்தைகள் உள்ளனர்  என்று காவல்துறை அதிகாரி கூறினார்.  சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................