ஜார்க்கண்டில் கொடூரம்: 11 பேரால் வன்புணரப்பட்ட இரண்டு மைனர் பெண்கள்

கைது செய்யப்பட்ட 11 பேரும் 18 இல் இருந்து 28 வயதுக்கு உட்பட்டவர்கள்

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஜார்க்கண்டில் கொடூரம்: 11 பேரால் வன்புணரப்பட்ட இரண்டு மைனர் பெண்கள்

ஆளில்லா இடத்தில் வைத்து பதினொரு பேரும் மாறி மாறி வன்புணர்ந்ததாக சிறுமிகள் அதிர்ச்சிப் புகார்


Lohardaga, Jharkhand: 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் லோகர்தாகா மாவட்டத்தில் இரண்டு மைனர் பெண்கள் ஆளில்லா இடத்தில் 11 பேரால் வன்புணரப்பட்டுள்ளனர். இதில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரையும் சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 18இல் இருந்து 28 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

ஆகஸ்ட் 16 ஆம் தேதி அன்று இரண்டு சிறுமிகளும் தங்களது பக்கத்து வீட்டுக்காரருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது பைக் பழுதாகி நின்றுள்ளது. இதனால் இரண்டு பெண்களில் ஒருவர் தனது நண்பருக்கு உதவி கேட்டு போன் செய்துள்ளார். ஆனால் இவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, அந்நபர் தனது நண்பர்கள் 11 பேரிடம் இத்தகவலைக் கூறி அவர்களை அங்கு அனுப்பியுள்ளான். அங்கு சென்ற அவர்கள், சிறுமிகளுக்குத் துணையாக இருந்த அவர்களது பக்கத்து வீட்டுக்காரரை அடித்துத் துரத்தியுள்ளனர்.

பின்பு 11 பேரும் அச்சிறுமிகளை ஆள் அரவம் இல்லாத இடத்துக்குத் தூக்கிச்சென்று மாறி மாறி வன்புணர்ந்துள்ளனர். இரண்டு பெண்களின் மொபைல் போன்களையும் பறித்து வைத்துக்கொண்டனர் என்றும் போலிசார் கூறுகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் 11 பேரில் ஒருவனது வீட்டில் இருந்து தற்போது அந்த போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடந்து வருகின்றது.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................