கோவை நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!

சனிக்கிழமையன்று மாலையில், முகத்தை துணியால் மூடியப்படி நிதி நிறுவத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கு பணியில் இருந்த 2 பெண்களை தாக்கிவிட்டு அங்கிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!

சம்பவத்தின் போது எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிகளும் அலுவலகத்தில் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Coimbatore:

கோவையில் தனியார் நிதி நிறுவனத்துக்குள் முகமூடி அணிந்து வந்த மர்ம மனிதன், பணியில் இருந்த பெண் ஊழியர்களை தாக்கி ரூ.2 கோடி நகைகள், ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமையன்று மாலையில், முகத்தை துணியால் மூடியப்படி நிதி நிறுவத்துக்குள் நுழைந்த அந்த மர்ம நபர், அங்கு பணியில் இருந்த 2 பெண்களை தாக்கி, அவர்கள் மீது மயக்க மருந்தை தெளித்து மயங்கடித்தவிட்டு, அங்கிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சிறிது நேரத்திற்கு பின்னர் மயக்கம் தெளிந்த பெண்கள் எழுந்து பார்த்தபோது, லாக்கர்கள் திறந்த கிடந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய 5 சிறப்புப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 பெண் ஊழியர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அந்த நிறுவனத்தின் கீழ் பகுதியில் உள்ள கடையில் இருக்கும் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முகத்தில் துணியை கட்டியபடி நிதி நிறுவத்திற்கு உள்ளே செல்வதும், வெளியே வருவதும் பதிவாகியுள்ளது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் முகமூடி அணிந்துள்ளதால், அவர் யார் என்பது குறித்து அடையாளம் காண முடியவில்லை. இந்த கொள்ளை சம்பவத்தின் போது எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிகளும் அலுவலகத்தில் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.