அப்போலோ தொடர்ந்த வழக்கு: ஜெ., மரண விசாரணைக்கு இடைக்காலத் தடை!

Jayalalithaa Death: சென்னை, கீர்ம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்தான், ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
அப்போலோ தொடர்ந்த வழக்கு: ஜெ., மரண விசாரணைக்கு இடைக்காலத் தடை!

Jayalalithaa Death Case: விசாரணை ஆணையம் சார்பில் அப்போலோ மருத்துவமனைக்கும், அதன் மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. முன்னதாக அப்போலோ சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது
  2. அந்த வழக்கில் விசாரணை ஆணையத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை
  3. ஜெ., மரணம் தொடர்பாக ஓராண்டுக்கு மேலாக கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை குறித்து அப்போலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடுத்து, ஆறுமுகசாமி கமிஷன் விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, கீர்ம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்தான், ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லப்பட்டதை அடுத்து, ஓய்வு பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் சார்பில் அப்போலோ மருத்துவமனைக்கும், அதன் மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அப்போலோ உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதில்தான் தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................