This Article is From Jan 22, 2019

“ஒன்னும் பண்ண முடியாது..!”: ஸ்டாலின் -தினகரனுக்கு ஜெயக்குமார் நேரடி சவால்

வரும் 24 ஆம் தேதி ஆளுநர் மாளிகை எதிரில் திமுக மாபெரும் போராட்டத்தை நடத்தும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

“ஒன்னும் பண்ண முடியாது..!”: ஸ்டாலின் -தினகரனுக்கு ஜெயக்குமார் நேரடி சவால்

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்துப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அவர் மீது அழுத்தத்தை அதிகரிக்க திமுக அடுத்தக்கட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதன்படி வரும் 24 ஆம் தேதி ஆளுநர் மாளிகை எதிரில் திமுக மாபெரும் போராட்டத்தை நடத்தும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “கொடநாடு விவகாரம் வந்ததில் இருந்து அதிமுக-வை உடைத்து விட வேண்டும். இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட வேண்டும் என்பதில் ஸ்டாலினும் தினகரனும் கங்கனம் கட்டிக் கொண்டுத் திரிந்தனர். எந்தக் கொம்பனாலும் அதிமுக-வை உடைப்பதற்கு எவனாலும் முடியாது. எத்தனைப் பிறவி எடுத்து வந்தாலும் அதிமுக என்ற இயக்கத்தை யாராலும் அழித்து விட முடியாது” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

முன்னதாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘முதலமைச்சர் எடப்பாடி உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகிட வேண்டுமென்றும், தமிழக ஆளுநர் முதல்வர் மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் - நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்க்குவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, வருகின்ற 24-1-19 அன்று காலை 10 மணியளவில், சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

.