உத்தர பிரதேசத்தில் மனைவியை வைத்து சூதாடி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கணவன்

Jaunpur, Uttar Pradesh: கணவன் மீண்டும் பின் தொடர்ந்து தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். சமாதானம் செய்து மனைவியை காரில் அழைத்துச் சென்றபோது மீண்டும் நண்பர்களை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
உத்தர பிரதேசத்தில் மனைவியை வைத்து சூதாடி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கணவன்

நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜாஃப்ராபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. (Representational)


Jaunpur, Uttar Pradesh: 

உத்தர பிரதேசத்தில் குடிபோதையில் மனைவியை பணயம் வைத்து  சூதாடிய கணவன், தோற்றதால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான கொடுமை சம்பவம் நடந்துள்ளது.  உத்தர பிரதேசத்தின் ஜான்பூர்  மாவட்டத்தில் இந்த கொடுமை நடந்துள்ளது.  பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திற்கு சென்று  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜாஃப்ராபாத்  காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 

பாதிக்கப்பட்ட பெண் தன் கணவர் குடிகாரர் என்றும் சூதாட்டத்தில் பங்கேற்பவர் என்றும் கூறியுள்ளார். கணவரின் நண்பர் அருண் மற்றும் உறவினர் அனில் ஆகியோர் அடிக்கடி தங்கள் வீட்டிற்கு குடித்துவிட்டு சூதாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். 

கணவன் சூதாடி தோற்றதும் இருவரும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின் அந்த பெண் தன்னுடைய மாமா வீட்டிற்கு சென்று விட்டார்.  கணவன் மீண்டும் பின் தொடர்ந்து தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். சமாதானம் செய்து மனைவியை காரில் அழைத்துச் சென்றபோது மீண்டும் நண்பர்களை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். காவல்துறையும் கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கை பதிவு செய்துள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................