தேசிய மாநாட்டு கட்சியின் முக்கிய தலைவர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மண்டல தலைவராக முகமது இஸ்மாயில் வானி இருந்தார்.

மருத்துவமனையில் வானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Srinagar:

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் முக்கிய தலைவர் முகமது இஸ்மாயில் வானி தீவிரவாதிகளால் சுடப்பட்டுள்ளார். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 

தேசிய மாநாட்டு கட்சியின் மண்டல தலைவராக இஸ்மாயில் வானி இருந்து வருகிறார். பிஜேஹரா என்ற இடத்தில் வைத்து வானியை தீவிரவாதிகள் சுட்டுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், ''எனது கட்சியின் முக்கிய நிர்வாகி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் உடல் நலம் பெறுவதற்கு பிரார்த்திக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் இஸ்மாயில் வானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.