புல்வாமாவில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் : ராணுவ வீரர் காயம்

பாதுகாப்பு படை மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

புல்வாமாவில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் : ராணுவ வீரர் காயம்

தீவிரவாத தாக்குதலில் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

Srinagar:

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். கையெறி குண்டுகளை வீசி அவர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம்தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காணிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், தீவிரவாத தாக்குதல் சம்பவம் இன்று நடந்திருக்கிறது.

இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

More News