ஜம்மு காஷ்மீர் கான்ஸ்டபிளை கடத்தி கொலை செய்த தீவிரவாதிகள்

காஷ்மீர் கச்தூரா பகுதியில் இருந்த காவல் துறை கான்ஸ்டபிள் ஜாவித் அஹமத்தை, தீவிரவாதிகள் வீடு புகுந்து கடத்தி சென்றனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
Srinagar: 

ஹைலைட்ஸ்

  1. கச்தூரா பகுதி கான்ஸ்டபிள் ஜாவித் அஹமத்தை, தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்
  2. என்கவுண்டரில் ஐந்து தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்
  3. சட்டம் ஒழுங்கு சீர்குலைப்பின் காரணமாக கூட்டனியை பாஜக முறித்து கொண்டது

ஶ்ரீநகர்: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட காஷ்மீர் கான்ஸ்டபிளின் உடல் துப்பாக்கி குண்டுகளுடன் மீட்கப்பட்டது.

காஷ்மீர் கச்தூரா பகுதியில் இருந்த காவல் துறை கான்ஸ்டபிள் ஜாவித் அஹமத்தை, தீவிரவாதிகள் வீடு புகுந்து கடத்தி சென்றனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கச்தூரா பகுதியில் நடைப்பெற்ற என்கவுண்டரில், ஐந்து தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தீவிரவாதிகள் கடத்தி சென்ற கான்ஸ்டபிளை கண்டறியும் பணிகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு நிறுத்தப்பட்ட தீவிரவாத எதிர் தாக்குதலின் போது, காஷ்மீர் மாநிலத்தில் திடீர் தீவிரவாத தாக்குதல்கள் அதிகமானதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

பின்னர், காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா மஃப்டி உடனான கூட்டனியை பாஜக முறித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைப்பின் காரணமாக கூட்டனியை முறித்து கொள்வதாக பாஜக தெரிவித்திருந்தது. மேலும், ரமலான் பண்டிகை விடுமுறைக்கு கிளம்பிய அவுரங்கசேப் என்ற இராணுவ வீரரை தீவிரவாதிகள் சுட்டுக் கொண்ட சம்பவத்தை பாஜக சுட்டிக்காட்டியது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................