This Article is From Aug 14, 2019

ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் விருப்பப் படி வளர்ச்சிக்கான திட்டங்கள் இருக்கும் - பிரதமர் மோடி

மக்களை கொடுமைபடுத்தும் மாவோயிஸ்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு மட்டும் எதிர்ப்பவர்களின் மனது துடிக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுடன் நிற்கிறார்கள். அவர்களும் எங்களுடன் நிற்பார்கள் என்று நம்புகிறேன்.

ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் விருப்பப் படி வளர்ச்சிக்கான திட்டங்கள் இருக்கும் - பிரதமர் மோடி

சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் வளர்ச்சிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்த முதல் 75 நாட்களில் எடுத்த மிகப்பெரிய முடிவுகளில் ஒன்றான ஜம்மு -காஷ்மீரில்  சிறப்பு அந்தஸ்தை கொடுக்கும் 370 வது பிரிவை நீக்கி அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. ஜம்மு -காஷ்மீரை இந்திய ஒன்றியத்திற்குள் முழுமையாக ஒருங்கிணைத்தார். 

370வது பிரிவை நீக்கிய முடிவை பலரால் வரவேற்கப்பட்டுள்ளது. ஆனால் அது செய்யப்பட்ட  விதம் சிலரின் விமர்சனத்தையும் எதிர்கொண்டது. ஜம்மு-காஷ்மீரில் இந்த முக்கிய நடவடிக்கை குறித்து  செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ் பிரதமருடன் கலந்துரையாடியது. 

இந்த நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் அமைதி அசாதாரணமானதாக தெரிகிறது. ஜம்மு & காஷ்மீர் மக்கள் உங்களுடன் நிற்பார்கள் என்று ஏன் நினைக்கிறீர்கள்? 

பிரதமர் மோடி: தயவு செய்து காஷ்மீர் பற்றிய முடிவுகளை எதிர்த்த நபர்களின் பட்டியலைப் பாருங்கள் - வழக்கமான அரசியல் வம்சங்கள், பயங்கரவாதத்திற்கு அனுதாபம் காட்டுபவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சில நண்பர்கள் மட்டுமே. இந்திய மக்கள் அவர்களின் அரசியல் விருப்பம் எதுவாக இருந்தாலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆதரவளித்துள்ளது. முன்னர் சாத்தியமற்றது என்று கருதப்பட்ட கடுமையான ஆனால் அத்தியாவசிய முடிவுகள் சாத்தியமாகியுள்ளது என்று மக்கள் எண்ணுகின்றனர்.

370 மற்றும் 35ஏ ஜம்மு -காஷ்மீர்  மற்றும் லடாக் ஆகியவற்றை எவ்வாறு முழுமையாக தனிமைப்படுத்தின என்பது இப்போது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஏழு நீண்ட தசாப்தங்கள் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவில்லை. குடிமக்கள் வளர்ச்சியின் பலன்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். வருவாயை அதிகரிக்க சரியான பொருளாதார வழிகள் இல்லை. இப்போது வளர்ச்சிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

நேர்காணலில் பிரதமர் மோடி: “ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் சகோதர சகோதரிகள் எப்போதும் சிறந்த எதிர்காலத்தை விரும்பினர். ஆனால் 370 வது பிரிவு அதை செயல்படுத்தவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதியினர் மீது அநீதி இழைக்கப்பட்டன. தற்போது பிபிஓக்கள் முதல் உணவு பதப்படுத்துதல், சுற்றுலா என அனைத்துக்குமான சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன. பல தொழில் முதலீட்டைப் பெறலாம். உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்க முடியும். கல்வி திறன் மேம்படையும் என்று கூறினார்.

ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் விருப்பத்தின் படியும் அவர்களின் கனவுகள் மற்றும் லட்சியங்களின் படியும் உருவாகும் என்று உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த மாநிலத்தின் வளர்ச்சி முதன்மையானது. 370வது மற்றும் 35 ஏ பிரிவினால் மக்களின் வளர்ச்சி தடைபட்டிருந்தது. வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கலி உடைந்து விழுந்தன. இனி மக்கள் தங்களின் நோக்கத்தை தானே வடிவமைப்பார்கள் என்று பிரதமர் கூறினார்.

ஜம்மு -காஷ்மீர் தொடர்பான முடிவுகளை எதிர்ப்பவர்களுக்கு பிரதமர் மோடி ஒரு அடிப்படை கேள்விக்கு பதிலளிக்குமாறு கேட்டார்: 370 மற்றும் 35 ஏ பிரிவினைத் தொடர்வது எவ்வாறு பாதுகாப்பளிக்கும் என்று கேள்வி எழுப்பினார்?

இந்த கேள்விக்கு அவர்களிடம் எந்த பதிலும் இருக்காது. மேலும் பொது மக்களுக்கு உதவும் எந்தவொரு விஷயத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப் பழகியவர்களும் இவர்கள்தான். மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கான திட்டம் உள்ளது, அவர்கள் அதை எதிர்பார்கள். அங்கே ஒரு ரயில் பாதை அமைக்க நினைப்போம் அதை அவர்கள் எதிர்ப்பார்கள். 

மக்களை கொடுமைபடுத்தும் மாவோயிஸ்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு மட்டும் எதிர்ப்பவர்களின் மனது துடிக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுடன் நிற்கிறார்கள். அவர்களும் எங்களுடன் நிற்பார்கள் என்று நம்புகிறேன். வளர்ச்சி மற்றும் அமைதியின் பொருட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் எங்களுடன் இருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

.