This Article is From Feb 16, 2019

காஷ்மீரில் மீண்டும் ஒரு தாக்குதல்! - குண்டுவெடிப்பில் ராணுவ மேஜர் மரணம்!

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த 48 மணி நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

காஷ்மீரில் மீண்டும் ஒரு தாக்குதல்! -  குண்டுவெடிப்பில் ராணுவ மேஜர் மரணம்!

பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்கள் மூலம் இந்த வெடி குண்டு வைக்கப்பட்டதாக தெரிகிறது.

Jammu:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில், சக்திவாய்ந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்க முயன்றபோது, மேஜர் பதவியில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்துள்ளார்.

ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியான நவ்ஷேரா செக்டர் பகுதி பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த பகுதியில் வெடிகுண்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இங்கு வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளில் சிலவற்றை செயலிழக்கச் செய்யும் பணியில் ராணுவம் ஈடுபட்டபோது, அதில் ஒரு குண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த 48 மணி நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் மீண்டும் பணிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு கார் ஒன்று துணை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்துகளில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதியது. இதில், அந்த பேருந்து முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன. இதில் துணை ராணுவ வீரர்கள் 44 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்களிடம் ஆவேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர். இந்த தாக்குதலில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரு தமிழக வீரர்கள் உயிரிழந்தனர்.

.