ஜமால் கஷோகி கொலை வழக்கு : சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பகமான ஆதாரம் உண்டு

நம்பகமான சான்றுகள் இருப்பதாகவும், உயர்மட்ட சவூதி அதிகாரிகள் மற்றும் இளவரசரின் பொறுப்பு பற்றிய விசாரணையில் இது உறுதி ஆகியுள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஜமால் கஷோகி கொலை வழக்கு : சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பகமான ஆதாரம் உண்டு

கஷோகி அக்டோபர் 2 ஆம் தேதி இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.


Geneva: 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலையில் சவுதி அரேபியாவின் இளவரசருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான நம்பகமான ஆதாரம்  இருக்கிறது என்று ஐ.நா உரிமைகள் நிபுணரின் அறிக்கை தெரிவித்துள்ளது. 

ஐநா சிறப்பு பிரதிநிதி அக்னஸ் கலாமர்ட் நீதிக்கு புறம்பான அல்லது தன்னிச்சையான மரணதண்டனை நிறைவேற்றம் குறித்து  பேசுகையில் “ நம்பகமான சான்றுகள் இருப்பதாகவும், உயர்மட்ட சவூதி அதிகாரிகள் மற்றும் இளவரசரின் பொறுப்பு பற்றிய விசாரணையில் இது உறுதி ஆகியுள்ளது” என்று தெரிவித்தார். 

ஜமால் கஷோகியின் மரணம் குறித்து குற்றவாளி யாரென எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தவர். குற்றத்திற்கான அதிகாரத்தை வழங்கியதற்கான நம்பகத் தன்மை வாய்ந்த சான்றுகள் உள்ளதென மட்டும் தெரிவித்துள்ளார். 

அக்னஸ் கலாமர்ட்,  “ இளவரசரின் அதிகாரங்களைப் பற்றி ஜமால் கஷோகி அறிந்திருந்தார். இளவரசரைப் பற்றிய பயமும் ஜமால் கஷோகி இருந்தது” என்று தெரிவிக்கிறார். 

வாஷிங்க்டன் போஸ்டின் பங்களிப்பாளரும் விமர்சகருமான கஷோகி அக்டோபர் 2 ஆம் தேதி இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்தில் படுகொலை  செய்யப்பட்டார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................